நுளம்புக் கடியால் உடலில் அரிப்பு, எரிச்சலா..? வீட்டிலேயே இருக்கு வைத்தியம்..!


நுளம்புக் கடியால் தற்போது காய்ச்சல் வேகமாகப் பரவி வருகின்றது. இதனால் எங்கு பார்த்தாலும் சிரமதானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுசரி, நுளம்பு கடிக்கும் போது எமது உடலினுள் என்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதைப் பற்றி நீங்கள்அறிவீர்களா?

நுளம்புகளில் பெண் நுளம்பே மனித இரத்தத்தை உறிஞ்சுகின்றன. இவை ஒருவரின் மீது அமர்ந்தவுடன் அவற்றின் உணர்கொம்புகளின் துணையுடன் இரத்தத்தை உறிஞ்சுவதற்கு ஏற்ற பகுதியை இனங் கண்டுகொள்கின்றன. பின்னர் இரத்த நாளங்களை குறிவைத்து இரத்தத்தை உறிஞ்ச ஆரம்பிக்கின்றன.

இரத்தத்தை உறிஞ்ச ஆரம்பிப்பதற்கு முன்னதாக அதனது எச்சிலை தோலினுள் செலுத்துகின்றன. இதன் மூலம் இரத்தம் இறுகாது உறிஞ்சுவதற்கு ஏற்றவகையில் மாற்றப்படுகின்றது. பெண் நுளம்பானது தனது வயிறு நிரம்பும் வரை மனித இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் தன்மையுடையது.

இவ்வாறிருக்க, சிலருக்கு நுளம்புக் கடியினால் அரிப்பு மற்றும் எரிச்சல் என்பன ஏற்படுகின்றன. நுளம்புக்கடிக்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே தீர்வுகாணமுடியும்.

அது எப்படி என்கின்றீர்களா?
நுளம்பு கடித்த இடத்தில் பின்வரும் பொருட்களை தேய்ப்பதன் மூலம் நுளம்புக் கடியால் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சல் என்பன உடனே நீங்கி விடும்.

01. பொடியாக்கப்பட்ட ஐஸ் கட்டிகள்
02. தேன்
03. துளசி இலைகள்
04. ஓட்ஸ்
05. கற்றாளைச் சாறு
06. பேக்கிங் சோடா- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!