சூடாக்காமல் பாலை அருந்துவது சரியானதா..? இதப் படிச்சா ஷாக் ஆயிடுவீங்க..!


பால் எல்லோராலும் தினமும் பயன்படுத்தும் மிக முக்கியமான உணவுப் பொருட்களில் ஒன்றானது. இதில் உள்ள அதிகளவான கல்சியத்தால் எலும்புகள், பற்களின் வலிமைக்காக தினமும் நம்மில் பலர் பாலை அருந்துகின்றனர்.

இதைத் தவிர்த்து பாலினைப் பயன்படுத்துவதற்கு மற்றொரு காரணம் அது தசைகலின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் பங்களிப்பைச் செய்வதுடன், திசுக்களை சரிசெய்வதற்கும் இது பங்களிப்பைச் செய்து வருகிறது. ஆனால் தற்போது சிலர் ஆரோக்கியத்தின் பல நன்மைகள் கருதி கொதிக்க வைக்காமல் பாலை அப்படியே அருந்துகின்றனர்.

கொதிக்க வைக்காமல் அப்படியே அருந்துவதனால் செறிந்துள்ள ஊட்டச்சத்துக்கள் அப்படியே கிடைத்தாலும் அதில் காணப்படும் பக்டீரியா போன்ற நுண்ணங்கிகளின் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.இதனாலேயே எல்லோரும் பாலைக் கொதிக்க வைப்பதைப் பழக்கப்படுத்திக் கொண்டனர்.

ஆனால் இன்று அதிகமாக பதப்படுத்தப்பட்ட பால் தான கிடைக்கின்றது. பாலின் ஊட்டச்சத்துக்கள் குறையாமல் அதனைப் பதப்படுத்துவதுடன் அதனை குறிப்பிட்ட சில தினங்களிற்கு வைத்தும் பயன்படுத்த முடியும்.

ஆனால் பலருக்கு உள்ள சந்தேகம் பதப்படுத்தப்பட்ட பாலினை கொதிக்க வைத்தா பயன்படுத்த வேண்டும் என்பதே? உண்மையைச் சொன்னால் கொதிக்க வைப்பதே சிறந்தது. பதப்படுத்தும் போது குறித்தளவு வெப்பநிலையைப் பயன்படுத்துவதனால் சில பக்டீரியாக்களே இறக்கின்றன. ஆனால் பல நுண்ணங்கிகள் அதில் இருக்கத் தான் செய்கின்றன. இதனால் ஆரோக்கியத்திஒல் பல பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.


இப்பொதுள்ள மற்றொரு சந்தேகம் பதப்படுத்தப்பட்ட பாலினை மீண்டும் சூடாக்கும் போது அதன் ஊட்டச்சத்துக்கள் இழந்து விடுமா என்பது.. நாம் பாலினைச் சூடாக்கும் முறையைப் பொறுத்தே ஊட்டச்சத்துக்கள் பேணப்படுவதும் அவை இழப்பதும். பாலில் காணப்படும் கல்சியம், விட்டமின் டி, கே, பி1, பி2, பி12 மற்றும் புரோட்டின் உடலிற்கு அத்தியவசியமானது. இவற்றை அப்படியே பெற வேண்டுமானல் பாலைச் சூடாக்கும் முறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட பாலினை சூடாக்குவது எப்படி?
1)தொடர்ச்சியாக நீண்ட நேரம் பாலினைச் சூடாக்குவதைத் தவிர்த்தல்.
2)பாலைக் கொதிக்க வைக்கும் போது அதனைக் கலக்கிக் கொண்டே இருப்பது சிறந்தது.
3)பாலை கொதிக்க வைப்பதற்கு குறைந்தளவு வெப்பத்தைப் பயன்படுத்துவது சிறந்தது.
4)பாலை ஒரு தடவை சூடாக்கிய பின்பு நீண்ட நேரத்திற்கு வெளியே வைத்திருப்பதைத் தவிர்த்து, அதனைப் பயன்படுத்தும் வரை குளிரூட்டியில் வைத்திருப்பது சிறந்தது.
5)மைக்ரோவேவில் சூடாக்குவதைத் தவிர்த்து நெருப்பில் சூடாக்குவதே சிறந்தது.
சரியான முறையில் சூடாக்குவதனால் அதன் ஊட்டச்சத்துக்களைப் பேணுவதுடன். அதன் சுவையையும் அதிகப்படுத்த முடியும்.

பாலை சூடாக்காமல் குடிப்பது உடலிற்கு நல்லது என்ற ஆதாரமற்ற வாய் வார்த்தைகளை நம்பிக் கொள்ளாமல், பதப்படுத்தப்பட்ட பாலாக இருந்தாலும் சூடாக்கிக் குடிப்பதை வழக்கப்படுத்துவதே உங்களது ஆரோக்கியத்திற்குச் சிறந்தது. – © Tamilvoice.com | All Rights Reserved

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!