வாட்ஸ்அப் வீடியோ காலிங் வழியாக ஊடுருவும் ஹேக்கர்கள் – அவதானம் நண்பர்களே..!


வாட்ஸ்அப் வீடியோ காலிங் வசதி வழியாக ஹேக்கர்கள் பயனாளர்களின் தகவல்களை திருட முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் ‘ப்ராஜெக்ட் ஜீரோ’ எனும் பாதுகாப்பு ஆராய்ச்சிக் குழுவில் பணியாற்றும் நட்டெலி சில்வாநோவிக் (Natalie Silvanovich), வாட்ஸ்அப்- இல் இருந்த பக் ஒன்றை கண்டு பிடித்து தெரியப்படுத்தினார்.

பயனாளர்களின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்பை ஏற்று பதிலளித்தால் போன் ஹேங் ஆகும் பிரச்னை ஏற்படும். காரணம் அந்த எண்களில் இருந்து பக் ஒன்று அனுப்பப்படும். அதன் மூலம் வாட்ஆப்-இல் உள்ள தகவல்கள் அனைத்தும் ஹேக்கர்களின் கைக்கு சென்றுவிடும்.

சுமார் 150 கோடி பயனாளர்களைக் கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம், தன் செயலியில் இருந்த அந்த பிரச்னையை சரிசெய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி ஆன்டிராயட் பயனாளர்களுக்கு இந்த பிழை திருத்தப்பட்டதாகவும், ஐபோன் பயனாளர்களுக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்த பிழை திருத்தம் செய்யப்பட்ட அப்டேட்டட் வெர்ஷன் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் சரியானதா என்ற சந்தேகம் ஒருபுறம் இருக்க வாட்ஸ்அப் செயலியில் அடையாளம் தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்காமல் தவிர்ப்பது நல்லது.- Source: eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!