சுந்தர் சி படத்தில் இணைந்த சிம்பு – பிக் பாஸ் புகழ் மஹத்… ஹீரோயின் யார் தெரியுமா..?


சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தில் பிக் பாஸ் சீசன் 2 புகழ் மஹத் இணைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சிம்பு, அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி என பல நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

2013ம் ஆண்டு பவன் கல்யாண் நடிப்பில் வெளியான தெலுங்கு படமான ‘அட்டாரினிட்டிக்கி தாரேதி’ சூப்பர் ஹிட்டானது. சுந்தர் சி இயக்கும் இதன் தமிழ் ரீமேக்கில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார்.

பெயரிடப்படாத இந்த படத்தை லைகா புரொடக்ஷன் தயாரிக்கிறது. இதில் ஆகாஷ் மேகா, கேத்ரின் தெரசா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் படபிடிப்பு முன்பே தொடங்கி விட்டது.

தற்போது படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. படத்தில் யோகி பாபு இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து பிக் பாஸ் புகழ் மஹத்தும் இணைந்துள்ளாராம். சுந்தர் சி, சிம்பு, மஹத் இருக்கின்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மஹத் பெரும்பாலும் முக்கிய வேடத்தில் நடிப்பார் என தெரிகிறது. இவரும் சிம்புவும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.- Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!