உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் உணவுகள் இவைதானாம்..!


உயர் இரத்த அழுத்தம் என்பது நம்மில பலருக்கு ஏற்படும் பொதுவான் நோயாக மாறி விடுகிறது. இதனாலிரத்த நர்ம்புகள் சிதவடைவதனால் இதயத் தொகுதி செயலிழக்கும் அளவிற்கு ஆபத்துள்ளது.

இரத்த அழுத்தம் அதிகமாவதற்கு பல காரணம்க்கள் இருந்தாலும் முக்கிய பங்கு வகிப்பது உணவுப் பழக்கங்களே.

இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் உணவுகள் எவை?

1. பொதிசெய்யப்பட்ட உணவுகள்.
பொதி செய்யப்பட்ட உணவுகளில் அதிகல்வான உப்பும் சோடியமும் இருப்பதனால் இவை பழுதடையாமல் இருக்கிறது. ஆனால் இது உயர் இரத்த அழுத்தத்தை அதிகரித்து விடுகிறது.

2. கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள்.
கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள் இரத்த நரம்புகளின் சுவர்களை கடினமாக்குகிறது. அதனால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். அதற்கு பதிலாக காய் வகைகள், பழங்கள் அதிகம் சேர்த்துக் கொல்வது சிறந்தது.

3. மதுபானம்.
எப்போதாவது மதுபானத்தை உட்கொள்பவர்களிற்கு இரத்த அழுத்தம் அதிகரிப்பதில்லை. ஆனால் தொடர்ச்சியாக இதற்கு அடிமையானவர்களிற்கு உயர் இரத்த அழுத்தத்திற்கான ஆபத்து அதிகமாகவே உள்ளது.

4. காபி.
காபி குடிப்பதனால் அதில் உள்ள காஃபின் இரத்த நாடிகளை சுருங்கச் செய்வதன் மூலம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கின்றது.

5. பால்.
பாலில் அதிகளவான கொழுப்புக்கள் உள்ளதனால் குறிப்பாக எருமைப் பால், ஆட்டுப்பால், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பயன்படுத்துவது சிறந்ததல்ல.

6. சீஸ்.
சீஸில் அதிகளவான் உப்புப் பயன்படுத்துவதனால் இதனை தவிர்ப்பது சிறந்தது.


7. இனிப்பு பண்டங்கள்.
இனிப்பு பண்டங்கள் அதிகம் உட்கொள்வதனால் நீரிழிவு நோய், உடல் எடை அதிகமாவதுடன், இவை இரத்த நரம்புகளின் இயல்புத் தன்மையை மாற்றி கடினமாக்குகிறது இதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்கச் செய்யும்

8. பதப்படுத்திய இறைச்சி.
பதப்படுத்திய இறைச்சிகளை தவிர்ப்பதற்கான இரண்டு காரணங்கள்.

1. அவை கெடாமல் இருப்பதற்கு பயன்படுத்தும் பொருட்கள் குறிப்பாக உப்பு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும்.

2. இது உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்வதன் மூலம் கொலஸ்ட்ரோல் பிரச்சினை ஏற்படும். இதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்கச் செய்யும்.

9. ஊறுகாய்.

ஊறுகாய் தயாரிக்கும் போது அவை பழுதடைந்து விடாமல் இருப்பதற்கு அதிகளவான உப்பினைப் பயன்படுத்துவார்கள். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிகளவான உப்பினைச் சேர்த்துக் கொள்வதனால் இரத்த அழுத்தம் மேலும் அதிகரிக்கும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!