உங்க டூத்பேஸ்ட் ஆபத்தானது என்பதை வெளிப்படுத்தும் 4 அறிகுறிகள்!


சருமம் மற்றும் முடிக்காக தயாரிக்கப்படும் கொஸ்மட்டிக் கொருட்களைப் போன்றே பற்களின் பாருகாப்பிற்கும் பல வகையான பொருட்களை சந்தையில் உள்ளன. ஆனால் அவை எல்லாம் போதியளவு தீர்வைத் தருகின்றதா எனக் கேட்டால் இல்லையென்பதே பதிலாக உள்ளது.

நீங்கள் பயன்படுத்தும் பற்பசைகள் சரியானதா என்பதை நீங்கள் அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது. அது சரியான தீர்வைத் தராத பட்சத்தில் சிறந்த பற்பசையை மாற்ற வேண்டியது அவசியமானது.

பற்பசைகளை மாற்ற வேண்டியதற்கான அவசியம் என்ன?

1. பற்சிதைவுகள் ஏற்படுதல்.
பல் துலக்கி கொப்பளித்த பின்பும் உணவுத் துண்டுகள் முழுமையாக நீங்கவில்லையென்றால் பக்டீரியாக்கள் வளர்ந்து அமிலத் தன்மையை உருவாக்கி பற்களை சிதத்து விடுகிறது. சிறந்த அழுக்குகலை நீக்கும் பற்பசைகளை தினமும் பயன்படுத்துவது அவசியமானது.

2. பற்களின் கூச்ச உணர்வு.
சூடான அல்லது குளிரான உணவுகளை உட்கொள்ளும் போது கூச்ச உணர்வு அல்லது வலி ஏற்பட்டால் நரம்பு முடிச்சுக்கள் வெளியே தென்படுவதே காரணம். அந்த சந்தர்பங்களில் இதற்காக தாயரிக்கப்பட்ட சிறப்பான பற்பசைகளைப் பயன்படுத்துவதனால் நரம்புகளின் முடிச்சுக்கள் வெளியில் தெரியாமல் மூடுவதனால் வலி குறைவடையும்.

3. பற்களில் கறைகள் படிதல்.
தினமும் டீ, காபி, சில மருந்துகள் மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதனால் வெண்மையான் பற்கள் மங்கத் தொடங்கி விடும். அந் நேரங்களில் பற்களை வெண்மையாக்கும் பற்பசைகளை தேர்வு செய்வது அவசியமானது.

4. வாய்த் துர்நாற்றம் ஏற்படுதல்.
சரியான பற்பசைகளைப் பயன்படுத்தி தினமும் பற்களை துலக்காமல் இருப்பதனால் உணவுகள் வாய்ப் பகுதியில் தேங்குவதுடன் அவை பற்களிற்கு இடையிலும், பல்லீறுகளிற்கு இடையிலும், நாக்குப் பகுதியிலும் சேர்வதனால் பக்டீரியாக்களை வளரச் செய்து அதன் மூலம் வாய்த் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். அவ் வேளைகளில் சரியான பற்பசைகளை தேர்வு செய்வது அவசியமானது. – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!