சைனஸ் பிரச்சினையை நிரந்தரமாக நீக்கும் அற்புதமான கலவை… எப்போது குடிக்க வேண்டும்..?


எம்மில் பலர் சைனஸ் பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருகின்றார்கள் என்பது தான் உண்மை. எமது உடலில் உள்ள சைனசஸின் சுவர் பகுதியில் ஏற்படும் தொற்றே இந்த சைனஸ் பிரச்சினையாகும்.

சிலருக்கு இந்த சைனஸ் பிரச்சினையால் தலைவலி மற்றும் அதிகபடியான காய்ச்சலும் ஏற்படும். சிலர் இந்த பிரச்சினைக்கு மருந்து வில்லைகளைப் பயன்படுத்தி தீர்வு காண முயற்சிப்பர். சில வில்லைகளால் இதற்கு தீர்வை கொண்டு வர இயன்ற போதும் மேலும் சில வில்லைகளால் இதற்கு தீர்வு காண முடியாது போகின்றது.

இருப்பினும் இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தி இதற்கு தீர்வு காண முடியும் என்பதை நீங்கள் அறிவீர்களா?

முறை 01
உங்கள் நாக்கினால் வாயின் மேல் பகுதியை தொட வேண்டும். இவ்வாறு செய்து கொண்டு புருவங்கள் இரண்டிற்கும் நடுவில் உள்ள பகுதியை பெருவிரலால் 20 செக்கன்களுக்கு அழுத்த வேண்டும். பின்னர் அந்த அழுத்தத்தை விடும் போது சைனஸ் பிரச்சினை முடிவுக்கு வந்து விடும். ஒரு மணித்தியாலத்திற்கு ஒரு தடவை இவ்வாறு செய்வதன் மூலம் சைனஸ் பிரச்சினையிலிருந்து விடுபட முடியும்.

முறை 02


தேவையான பொருட்கள்

01. அரைக் கோப்பை தண்ணீர்
02. ஒரு மேசைக் கரண்டி தேன்
03. நான்கில் ஒரு பகுதி ஆப்பிள் சைடர் வினிகர்
04. ஒரு மேசைக் கரண்டி மிளகு
05. ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு

செய்முறை
முதலில் தண்ணீரை நன்கு கொதிக்க விடவும். பின்னர் அதனை கோப்பை ஒன்றில் ஊற்றி அதில் ஆப்பிள் சைடர் வினிகரை ஊற்றவும். அந்தக் கலவையை நன்கு கலக்கி அதனுடன் தேன் மற்றும் மிளகை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்தக் கலவையுடன் எலுமிச்சம் சாற்றையும் கலந்து நன்கு கலக்க வேண்டும்.

இந்தக் கலவையை காலையில் எழுந்து காலை உணவு உட்கொள்வதற்கு முன்னதாகவும் பின்னர் இரவு உணவு உட்கொள்வதற்கு முன்னதாகவும் பருக வேண்டும். சைனஸ் பிரச்சினைகளை முற்றாக தீரும் வரை இந்த கலவையை பருக வேண்டும்.

இந்தக் கலவையை பருகுவதன் மூலம் அழற்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு நோயெதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். அத்துடன் பக்டீரியா மற்றும் தலைவலி ஏற்படுவது தடுக்கப்படும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!