வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு பற்களில் உள்ள மஞ்சள் கறையை அகற்றுவது எப்படி..?


வாய் சுகாதாரத்தை பேணுவதென்பது நம் ஒவ்வொருவருக்கும் அவசியமானதொன்றாகும். சரியாக பராமரிக்கத் தவறும் பட்சத்தில் பற்களில் அழுக்குகள் சேர்ந்து வாய் சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன் துர்நாற்றமும் வீச ஆரம்பிக்கும்.

பற்களில் சேரும் அழுக்குகளை வீட்டிலிருந்தே எவ்வாறு அழிப்பது என்பது தொடர்பில் இப்போது பார்ப்போம்!

01. பேக்கிங் சோடா மற்றும் பற்பசை
– பேக்கிங் சோடா (ஒரு மேசைக் கரண்டி)
– உப்பு (அரை தேக்கரண்டி)
– ஹைட்ரஜன்பரொக்சைட் (ஒரு கோப்பை)
– தண்ணீர் (அரைக் கோப்பை)
– மௌத்வொஷ;

செய்முறை
பேக்கிங் சோடா மற்றும் உப்பு ஆகியவற்றை கலந்து அதனை பசை போல் ஆக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் பற்தூரிகையை எடுத்து அதனை தண்ணீரில் நனைத்து குறித்த பசையை அதில் பூசி 5 நிமிடங்களுக்கு பல் துலக்க வேண்டும்.

பின்னர் தண்ணீர் மற்றும் ஹைட்ரஜன்பரொக்சைட் ஆகியவற்றை கலந்து கொள்ளுங்கள். இந்த நீரால் ஒரு நிமிடம் வரை வாயை கொப்பளித்துக் கொள்ளவும். பின்னர் மௌத்வொஷ; அல்லது தண்ணீர் கொண்டு வாயை கழுவவும். பின்னர் டூத்பிக்கை உபயோகித்து பல் இடுக்குகளில் உள்ள அழுக்குகளை அகற்றவும்.

02. வெள்ளை வினாகிரி மௌத்வொஷ;

தேவையான பொருட்கள்
– வெள்ளை வினாகிரி (2 தேக்கரண்டி)
– உப்பு (1 தேக்கரண்டி)
– வெதுவெதுப்பான நீர் (அரைகோப்பை)

செய்முறை
மேற்குறித்த அனைத்தையும் கலந்து கொள்ளவும் பின்னர் இந்தக் கலவையை மௌத்வொஷ; ஒன்றைப் போல பயன்படுத்தவும். நாளொன்றிற்கு ஒரு தடவை அல்லது இரண்டு தடவைகள் இது போன்று செய்வது உத்தமம்.

03. கராம்பு மற்றும் ஒலிவ்எண்ணெய்

தேவையான பொருட்கள்
– அரைத்த கராம்பு (ஒருதேக்கரண்டி)
– ஒலிவ் எண்ணெய்
– வெதுவெதுப்பான நீர்
செய்முறை
அரைத்த கராம்பு மற்றும் ஒலிவ் எண்ணெயை கலந்து அந்த கலவையை பற்களில் பூச வேண்டும். பின்னர் சிறிது நேரத்தில் வாயை நன்கு கழுவ வேண்டும். நாளொன்றிற்கு இவ்வாறு இரண்டு முறை செய்தல் வேண்டும். வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க வேண்டுமெனில் கராம்பு ஒன்றிரண்டை எடுத்து அதனை மெல்லுதல் மூலம் வாய் துர்நாற்றத்தை விரட்டியடிக்கலாம்.

04. கற்றாளை
தேவையானபொருட்கள்
– கற்றாளை இலை
– குளிர் நீர்
செய்முறை
கற்றாளை இலைகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி எடுத்து அதில் உள்ள சாறை வெட்டி எடுக்க வேண்டும். பின்னர் அந்த சாற்றை பற்களில் பூசி 10 நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரால் வாயை கழுவ வேண்டும். நாளொன்றிற்கு இரு முறை இவ்வாறு செய்தல் சிறந்தது.

05. தேங்காய் எண்ணெய்
தேவையான பொருட்கள்
– தேங்காய் எண்ணெய் ஒரு மேசைக் கரண்டி

செய்முறை
வாயில் எண்ணெயை விட்டு வளியின் உதவியுடன் அதனை பற்களில் படும்படி அங்கும் இங்குமாக 15 – 20 நிமிடங்களுக்கு அசைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் போது எண்ணெயை முழுங்கவோ அல்லது கொப்பளிக்கவோ கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்து முடிந்தவுடன் வழமை போல் பற்களை துலக்க வேண்டும். இந்த செய்முறையை காலை எழுந்தவுடன் மேற்கொள்வது சிறந்தது. – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!