மண்டைய பிளக்கும் தலைவலியா..? 1 நிமிடத்தில் விரட்டும் அக்யூபஞ்சர் மருத்துவம்..!


தலைவலி என்பது கேட்பதற்கு சாதாரணமான விடயமாக இருந்தாலும் சில சமயங்களில் நாம் மேற்கொள்ளும் அனைத்து விடயங்களுக்கும் அது முட்டுக் கட்டையாக அமைந்துவிடும்.

இதற்கு அக்யூபஞ்சர் முறைப்படி சில பகுதிகளில் 30 செக்கன்கள் தொடக்கம் 1 நிமிடம் வரை மசாஜ் செய்தால் தலைவலி பறந்துவிடும். அத்துடன் அக்யூபஞ்சர் முறைப்படி பல விடயங்களுக்கு தீர்வு காண முடியும். அவை என்ன என்பது தொடர்பில் இப்போது பார்ப்போம்.

01. பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலுக்கு நடுவில் உள்ள பகுதியில் சிறிது அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய பல்வலி, முதுகுவலி மற்றும் கழுத்துப் பகுதியில் உள்ள வலி என்பன இல்லாமல் போகும்.

02. தலைப் பகுதியில் காதுக்கு மேலாக 2 – 3 செ.மீட்டர்கள் உயரத்தில் இந்தப் புள்ளி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் மசாஜ் செய்வதன் மூலம் கண்ணில் தோன்றும் சோர்வு இல்லாது போகும்.


03. தலையின் பின்புறம் மற்றும் காதுக்கு இடைப்பட்ட அதே சமயம் முதுகெலும்பு ஆரம்பிக்கும் பகுதியிலேயே இந்த புள்ளிகள் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் மசாஜ் செய்வதன் மூலம் மூக்கடைப்பு, கண் மற்றும் காதுகளில் உள்ள வலி, கடும் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி என்பன குணமடையும்.

04. கண்களுக்கு கீழாக அதே சமயம் மூக்கின் இரு புறமும் உள்ள புள்ளிகளே இதுவாகும். சைனஸ், தலைவலி, பல்வலி மற்றும் மனஅழுத்தம் போன்றவை இந்தப் பகுதியில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் குணமடையும்.

05. புருவங்கள் இரண்டும் ஆரம்பிக்கும் புள்ளிகளே இதுவாகும். இந்தப் புள்ளியில் ஒரு நிமிடத்திற்கு அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வதன் மூலம் மூக்கு வடிதல் நின்று விடும்.

06. இரண்டு புருவங்களுக்கும் நடுவில் உள்ள புள்ளியில் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வதன் மூலம் கண்களில் ஏற்படும் சோர்வு முற்றாக அகன்று விடும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!