இதைப் படித்தால் நிச்சயம் இனிமேல் வாழைப்பழத் தோலை வீச மாட்டீர்கள்!


வாழைப் பழத்தை உட்கொள்வதன் மூலம் நாம் பல்வேறு நன்மையடைகின்றோம் என்பது எல்லோரும் அறிந்ததொன்று. இருப்பினும், வாழைப்பழத்தின் தோலை உபயோகித்தும் நன்மை அடையலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா?

வாழைப்பழத் தோலின் பயன்பாட்டால் ஏற்படும் நன்மைகள் பற்றி நீங்கள் அறிந்தால் இனிமேல் வாழைப்பழத் தோலை வீசுவதற்கு முன்னர் சற்று சிந்திப்பீர்கள்.

அவ்வாறானால் வாழைப்பழத் தோலினால் ஏற்படும் நன்மைகள் என்ன வென்பது தொடர்பில் இப்போது பார்ப்போம்.

01. வாழைப் பழத் தோலின் உட்புறத்தை தொடர்ந்து 15 நாட்களுக்கு பற்களில் தேய்த்தால் பற்கள் வெண்மையாகும்.

02. வாழைப்பழத் தோலிள் உட்புறத்தை முகத்தில் பூசி தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு வைத்திருந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்குவதுடன் பருக்களும் மறையும்.

03. உடம்பின் ஏதேனும் பகுதியில் வலி ஏற்படின் வாழைப் பழத்தின் உட்புறத் தோலை பூசுவதன் மூலம் வலி உடனடியாக மறைந்து விடும்.

04. சொரியாசிஸ் எனப்படும் தோல் நோயை குணமாக்கும் வல்லமை கொண்டது. வாழைப்பழத்தின் உட்புறத்தை குறித்த பகுதிகளில் பூசுவதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.

05. வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் உடலுக்குத் தேவையான சக்தியை வழங்குவதோடு கலோரிகள் எரிக்கப்படுவதை அதிகரிக்கின்றது. இதனால் உடல் எடை குறைவடையும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!