உங்களுக்கு பைத்தியம் பிடிக்கலையா..? அனந்த் வைத்தியநாதன் அதிரடி கேள்வி..!


பிக்பாஸ் வீட்டுக்கு தினமும் சிறப்பு விருந்தினர்களாக முந்தைய போட்டியாளர்கள் வருகை தந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று அனந்த் வைத்தியநாதன், மமதி சாரி மற்றும் பாலாஜி ஆகியோர் வருகை தந்துள்ளனர். விஜய் டிவியின் செல்லப்பிள்ளை பாலாஜி என்பதால் இரண்டாவது முறையாக பாலாஜி இன்று வருகை தந்துள்ளார்.

இன்று பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்த அனந்த் வைத்தியநாதன், ‘பாலாஜியின் மாற்றம் மிகப்பெரிய அதிசயம் என்றும், இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற அனைவருக்கும் வெளியே வந்தவுடன் நல்ல எதிர்காலம் காத்திருப்பதாகவும் கூறினார்.

அதே நேரத்தில் இத்தனை நாள் தாக்குப்பிடித்து உங்களால் எப்படி இந்த வீட்டில் இருக்க முடிந்தது என்று கேட்ட அனந்த், எப்படி உங்களுக்கு பைத்தியம் பிடிக்காமல் உள்ளது என்றும் ஆச்சரியத்துடன் கேள்வி கேட்டார்.-Source: webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!