நிம்மதியாக உறங்க வேண்டுமா..? ஆடைகளுக்கு ‘நோ’ சொல்லுங்கள்..!


உறக்கம் என்பது எம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான தொன்றாகும். ஒழுங்கான உறக்கம் இல்லாது போனால் அது காலப் போக்கில் பல்வேறு விளைவுகளைக் கொண்டு வரும்.
சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை ஒரு நாளுக்கு எத்தனை மணித்தியாலங்கள் உறங்க வேண்டும் என்பது வைத்தியர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. காரணம் உறக்கமே எமது உடற்செயற்பாடுகளுக்கு உந்து சக்தியாக விளங்குகின்றது என்பதால் ஆகும்.

இவ்வாறிருக்க ஆடைகளின்றி உறங்குவதனால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

01. ஆடைகளுடன் உறங்கும் போது உடல் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். அதனால் இரு புறமும் திரும்பித் திரும்பி உறங்க வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் ஆடைகளின்றி உறங்கும் போது உடல் வெப்பநிலை குறைவடைவதோடு நிம்மதியான உறக்கமும் கிடைக்கும்.

02. வியர்வையில் பக்டீரியாக்கள் இருக்கும் என்பது நாம் அறிந்ததே. ஆடையின்றி உறங்கும் போது வியர்வை சுரப்பது குறையும். இதனால் ஈஸ்ட் மற்றும் பக்டீரியாக்கள் உருவாவது தடுக்கப்படும்.


03. உடற்பருமன் அதிகமாக இருப்பவர்கள் ஆடைகளைக் கலைந்து உறங்கினால் எடை குறையும். உடலில் உள்ள கொரிஸ்டோல் அளவு குறைவடைவதனால் நிம்மதியான உறக்கம் ஏற்படும். இதனால் அளவுக்கு அதிகமாக இருக்கும் கொழுப்புகள் கரையும்.

04. நிம்மதியான உறக்கம் காரணமாக உடம்பு தனக்கு தேவையான சக்தியை தக்க வைத்துக் கொள்ளும்.

05. ஆடைகளின்றி உறங்குவதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு அடிவயிற்றுப் பகுதியில் வலி இருந்தால் குணமடையும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!