தமிழகத்தை தாக்கவிருக்கும் கடும் புயல்..!! மக்களுக்கு எச்சரிக்கை தகவல்..!!


இந்த ஆண்டு தென் மேற்குப் பருவமழையால் தமிழகத்தில் தென்மாவட்டங்களில் மட்டும் ஓரளவுக்கு மழை பெய்தது. மற்றபடி சென்னை உட்பட எந்த மாவட்டங்களிலும் மழை இல்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழையால் தான் அதிகமான மழைப்பொழிவு இருக்கும். இந்நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் தென் மேற்கு பருவமழை காலகட்டம் முடிந்து வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மத்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நாளை முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அக்டோபர் 31 முதல் நவம்பர் 25 க்குள் பலத்த காற்றுடன் கூடிய மழையும் கடுமையான புயலும் தாக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த 25 நாட்களில் இரண்டு புயல்கள் தமிழகத்தை தாக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் தமிழகத்தில் எந்த அளவிற்கு மழை பெய்தாலும் அதை தாங்கும் அளவிற்கு பூமி தயாராக உள்ளது.

தமிழகத்தின் தென்மாவட்டடங்களில் நிலத்தடி நீர்மட்ட அளவு 300 அடிக்கு கீழே சென்றுவிட்டது. சென்னையிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் தவித்து வருகின்றனர். எனவே வரும் மழையை மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.source-seithipunal


* இந்த பதிஉங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!