வாவ்.. அந்தரத்தில் தொங்கும் வீடு கட்டி அசத்திய என்ஜினீயர்கள்…!! எங்கு தெரியுமா..?


இந்த உலகத்தில் பல்வேறு விதமாக கட்டிடங்களானது கட்டப்பட்டு வருகின்றது. பல நாடுகளில் கட்டிடங்களானது விண்ணை தொடும் அளவிற்கும், தரைக்கு அடியிலும், கடல் மட்டத்திலும், கடலுக்கு உள்ளேயும் வீடுகள் வித விதமாக கட்டபட்டு வருகின்றது.

இந்நிலையில் பல்வேறு அமைப்பியல் பொறியாளர்களுக்கு பல்வேறு யோசனைகளை இருக்கும்,

அதன் படி இந்த பொறியாளரும் ஒரு மாறுபட்ட யோசனையில் இந்த வீட்டை கட்டியுள்ளார். அதன் படி காற்றில் அசைந்தாடும் வீட்டை கட்டியதில் சாதனை புரிந்துள்ளது அமெரிக்கா.

இந்த கட்டிடத்தை நியூயார்க் நகர கட்டிடக்கலை மேதை அலெக்ஸ் மற்றும் ஓவியரான வார்ட் ஷெல்லி இவர்கள் இருவரும் இந்த கட்டிடத்தின் வடிவமைப்பை வடிவமைத்தனர்.

இந்த கட்டிடமானது 14 அடி உயரத்திலும், இதற்கு தேவையான மின்சாரத்தை காற்றின் வேகத்தில் வீடானது சுற்றும் பொழுது அதுவே தயார் செய்யுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வீடானது சிறு பிள்ளைகள் விளையாடும் சீசா போன்றே காற்றின் வேகத்திற்கு ஏற்றார் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வீட்டின் உள்ளே வைக்கப்பட்டிற்குக்கும் பொருள்களானது நிரந்தரமாக பொருத்தப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக வீட்டை தவிர வேறு பொருட்கள் அசைய வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீட்டை கட்டிய பொறியாளர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.source-seithipunal

* இந்த பதிஉங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!