சிறுநீரகப் பிரச்சனைக்கு தேனை இப்படியும் உபயோகிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா..?


தேன் என்பது மருத்துவ குணம் பொதிந்த ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்தத் தேனை தண்ணீருடன் கலந்து உட்கொள்வதென்பது அதன் மருத்துவ குணத்தை மேன்மேலும் அதிகரிக்க வல்லது.

தேனை தண்ணீருடன் கலந்து உட்கொள்வதனால் நாம் உண்ணும் உணவுகள் எளிதில் சமிபாடடையும். அத்துடன் நோயெதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். இதனை பருக ஆரம்பித்தவுடன், ஆரம்பத்தில் உடல் எடை சற்று கூடும். எனினும், இது விரைவில் வழமைக்கு திரும்பிவிடும். சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை என்பவை சுத்திகரிக்கும் செயற்பாட்டையும் இது செய்கின்றது.

இந்தக் கலவையை எவ்வாறு தயாரிப்பது?

தேவையான பொருட்கள்
01. ஒரு தேக்கரண்டி தேன்
02. ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீர்
03. சில துளிகள் எலுமிச்சம் சாறு
04. இலவங்கப்பட்டை அல்லது மஞ்சள் சிறிதளவு

செய்முறை
தண்ணீருடன் தேனை கலந்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.

உபயோகிப்பது எவ்வாறு?
ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் இந்த கலவையை பருக வேண்டும். அதாவது காலை உணவுக்கு முன்னதாக ஒரு தடவையும் இரவு படுக்கச் செல்வதற்கு முன்னதாக ஒரு தடவையும் அருந்த வேண்டும்.

குறிப்பு :
இந்த கலவையை பருகும் போது மெதுவாக பருக வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறை அருந்தும் போதும் இந்தக் கலவையை புதிதாக செய்யவேண்டும். இது தவிர இந்தக் கலவையை முகத்தை சுத்தம் செய்வதற்கும் உபயோகிக்கலாம். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிஉங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!