வீட்டிலேயே பழுப்பு நிறமான பற்களை வெண்மையாக்கும் இயற்கை முறைகள்..!


எல்லோருக்கும் வெண்மையான அழகான பல் வரிசை இருப்பதையே விரும்புகின்றனர். அதுவே அவர்களை சிறப்பாக மற்றவர்கள் முன்னிலையில் முன்னிறுத்த உதவுகிறது. ஆனால் மஞ்சள் நிற பற்கள் காணப்படுவதனால் பொது இடங்களில் சிரிப்பதற்கே தயங்கும் நிலை ஏற்படுகிறது.

பற்கள் மஞ்சள் நிறமடைவதற்கு காரணம் பரம்பரை, வயதடைதல், அதிகளவான டீ, காபி, போதைப் பொருட்கள் பயன்படுத்தல் மற்றும் பற்களின் பராமரிப்பில் கவனம் செலுத்தாமையே.
இரசாயண முறையில் சிகிச்சை அளிப்பதனால் பக்க விளைவுகல் அதிகமாகவே உள்ளது. அதனால் இயற்கை முறையில் வீட்டிலேயே இதற்கான தீர்வைப் பெறுவதே சிறந்தது.

பற்களை வெண்மையாக்கும் இயற்கை முறைகள்:

1. எலுமிச்சப்பழச் சாறு.
ஒரு தேக்கரண்டி எலுமிச்சப்பழச் சாற்றை ஒரு தேக்கரண்டி நீருடன் சேர்த்து பற்பசைகளால் பற்களை துலக்குவதற்கு முன்பாக இதனைப் பயன்படுத்தி துலக்கவும். நீர் சேர்ப்பதற்கான எலுமிச்சப்பழச் சாற்றில் உள்ள அமிலம் பற்களின் எனாமலை பாதித்திடக் கூடாது என்பதற்காக. வாரத்தில் இரண்டு தடவைகள் மட்டும் செய்தால் போதுமானது.

2. சமையல் சோடா.
சமையல் சோடாவை சிறிதளவு பற்பசையில் சேர்த்து பல் துலக்கி சூடான நீரில் கொப்பளித்தால் பற்களில் உள்ள பழுப்பு நிறம் நீங்கி வெண்மையடையும்.

3. தேங்காய் எண்ணெய்.
பல் துலக்குவதற்கு முன் தேங்காய் எண்ணெய்யை சில நிமிடங்கள் வாயில் வைத்து கொப்பளித்தால் சிறந்த தீர்வு கிடைக்கும்.

4. வாழைப்பழத் தோல்.
வாழப்பழத்தில் உள்ள மக்னீசியம், பொட்டாசியம் பற்களை வெண்மையாக்குவதற்கு உதவுகிறது. அதனால் வாழப்பழத் தோலை எடுத்து பற்கள் முழுவதுமாக நன்றாக தேய்த்து, 10 நிமிடங்களின் பின் பல் துலக்குவது சிறந்தது. இதனை தினமும் செய்து வருவது சிறந்தது.


5. ஒலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய்.
5 நாட்களில் வெண்மையான பற்கள கிடக்க வேண்டுமானால் ஒரு தேக்கரண்டி ஒலிவ் எண்ணெய் ஒரு தேக்கரண்டி பாதம் எண்ணெய் சேர்த்து தினமும் காலையில் பற்பசையால் பல் துலக்குவதற்கு முன்பாக இதனைப் பயன்படுத்தி பல் துலக்கினால் சிறந்தது.

6. பிரட்.
பிரட் துண்டை எரித்து அதனைப் பற்களில் தேய்ப்பதனால் பற்களின் வெண்மையை இலகுவாகப் பெற முடியும்.

7. உப்பு.
உப்பு சிறந்த சுத்தப்படுத்தியாக இருப்பது அணைவரும் அறிந்ததே. பற்பசைகளிற்கு பதிலாக உப்பை பயனப்டுத்தி பல் துலக்கவும். ஆனால் உப்பு முரசுகளை பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

8. சார்கோல்.(கரி)
சார்கோல் அழுக்குகளை நீக்கி பற்களை வெண்மையாக வைத்திருக்க உதவுவதனால் பற்பசையுடன் இதனைக் கலந்து தினமும் காலையில் பல் துலக்குவது சிறந்தது. – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!