யூ-டியூபில் குழந்தைகள் இனி என்ன மாதிரியான விஷயங்களை பார்க்கலாம் என வருகிறது கட்டுப்பாடு!

யூ-டியூப் வலைதளத்தில் தவறான விஷயங்களை புகட்டும் விடியோக்களில் இருந்து, குழந்தைகளை பாதுகாக்க, யூ-டியூப் கிட்ஸ் (youtube Kids) என்ற செயலியை, அந்நிறுவனம் கடந்த வருடம் வெளியிட்டது.

இந்த செயலி-யில் குழந்தைகளுக்கு ஏதுவான பரிந்துரைக்கப்பட்ட விடியோக்கள் மட்டும் தோன்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இதில் குழந்தைகளுக்கு தேவையில்லாத விடியோக்கள் வர வாய்ப்புள்ளதாக பெற்றோர்கள் மத்தியில் புகார்கள் எழுந்தது.

இதனை கருத்தில் எடுத்துக் கொண்ட அந்நிறுவனம், தற்போது இந்த செயலியில் புதியதொரு அமைப்பை உருவாக்கி உள்ளது.

அதன்மூலம்,பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் எந்தெந்த விடியோக்கள் மற்றும் சேனல்களை பார்க்கலாம் என அவர்களே தீர்மானித்து, செட்டிங்ஸை மாற்றும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் இந்த செட்டிங்ஸை எப்படி மாற்றலாம்?

இந்த புதிய சிறப்பம்சத்தை ஆன் செய்ய, யூ-டியூப் கிட்ஸ் செயலியில் உள்ள அமைப்புகளுக்குள் (settings) செல்ல வேண்டும்.

பிறகு சைல்டு புரெஃபைல் ( child profile) என்னும் பட்டனை அழுத்தினால் அப்ரூவ்டு கன்டன்ட் ஒன்லி ( approved content only)என்ற ஆப்சன் வரும். அதை கிளிக் செய்தால் போதும், நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஏதுவான விடியோ, மற்றும் சேனலை தேர்ந்தெடுக்கலாம்.

டிவீன்ஸ் (8-12 வயதுடையவர்கள்) காண புதிய செட்டிங்:

மேலும், 8 முதல் 12 வயதிற்குட்பட்ட வளர்ந்த குழந்தைகளுக்கென யூ-டியூப் கிட்ஸில் டிவீன்ஸ் (tweens) என்ற சிறப்பம்சமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதில், இசை, விடியோ கேம், ரியால்டி ஷோ உள்ளிட்ட பொழுதுபோக்கு தொடர்பான விடியோக்களை டிவீன்ஸ்கள் கண்டுகளிக்கலாம்.

இந்த புதிய அப்டேட்கள் பெற்றோர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.- Source: tamil.eenaduindia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.