பெட்ரோல் விலை உயர்வு குறித்து மத்திய அமைச்சர் பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது..!

நாடு முழுவதும் தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே, நான் ஒரு அமைச்சர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு பாதிக்கப்பில்லை. என்னுடைய அமைச்சர் பதவியை இழந்தால் நான் விலை உயர்வால் பாதிக்கப்படலாம் என ஜெய்பூரில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். மேலும் அவர் கூறுகையில்,

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களிடையே ஏற்பட்டுள்ள பாதிப்பை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. விலை உயர்வை குறைப்பது அரசாங்கத்தின் கடமை. மாநில வரியை குறைப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கலாம். மத்திய அரசாங்கம் விலை உயர்வை குறைக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது எனக் கூறினார். – Source: dailythanthi


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.