ஸ்மார்ட் போன்களின் போலி சார்ஜரை கண்டுப்பிடிப்பது எப்படி….?


நாம் அனைவரும் அதிகமாக செலவிடும் பொருளாகவும், நம்முடைய ஆடம்பரத்தையும் மற்றும் நம்முடைய பொருளதார நிலையை வெளிபடுத்தும் ஒன்றாக ஸ்மார்ட் போன்கள் விளங்குகின்றன.

அப்பொழுதெல்லாம் ஒருவரின் பொருளாதார நிலையை அறிய அவர்கள் உடுத்தும் ஆடைகள், நகைகளை வைத்து முடிவெடுப்பார்கள். ஆனால் இப்பொழுது அவர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள் தான் அவர்களின் நிலையை காட்டுகின்றது.

போலியான மொபைல் சார்ஜர்களால் தான் நம்முடைய ஸ்மார்ட்போனின் பேட்டரியின் திறன் குறைய காரணமாக இருக்கின்றது. இதுமாதிரி போலியான சார்ஜர்களில் தான் பல உயிரிழப்புகளும் அதிகமாக ஏற்படுகின்றன.

இதனால் பலர் அதிக பணம் கொடுத்து இணையதளத்தில் வாங்குவார்கள் அப்படி வாங்கும் போதும் போலியான சார்ஜர்கள் வந்து விடும். அதனை எப்படி கண்டுபிடிப்பது, அதற்கான சில வழிமுறைகள், பின்வருமாறு,

எது ஒரிஜினல் எது டூப்பு.

“சாம்சங்” போனின் போலி சார்ஜரை கண்டுப்பிடிப்பது எப்படி.

சாம்சங் போனில் போலி சார்ஜரை கண்டுபிடிப்பது எளிது என்று கூட சொல்லலாம் ஏனெனில் அதிகப்படியாக எழுத்துப்பிழை மற்றும் அச்சிடப்பட்டிருக்கும் லோகோ மூலம் கண்டுபிடித்திடலாம். இல்லை எனில் ஏ ப்ளஸ் மற்றும் மேட் இன் சைனா என்று எழுதி இருக்கும் இதில் இருந்து போலி சார்ஜரை கண்டறியலாம்.

ஆடம்பர போன்களின் ஒன்றான “ஆப்பிள்” போனிற்கும் இந்த நிலை இருக்கின்றது.

ஆப்பிள் போன்களுக்கும் போலி சார்ஜர் பரவலாகவே சந்தையில் கிடைக்கின்றன. அவற்றில் உண்மையான சார்ஜர் எது என்று கண்டுபடிப்பது என்றால், ஒரு ஒரிஜினல் சார்ஜரில் ” மேட் இன் கலிபோர்னியா” என்று இருக்கும். போலி சார்ஜரில் ஆப்பிள் நிறுவனத்தின் லோகோ கலர் வழக்கம் போல் இருக்காது. சற்று குறைந்து காணப்படும்.


“சியோமி” அடுத்தடுத்து பல வித்தியாசமான வகைகளின் மூலம் மக்களை கவர்ந்து கொண்டு வருகின்றன.

கேபிளின் நீளத்தை வைத்து கண்டுபிடித்திடலாம், ஒரிஜினல் சார்ஜரின் கேபிளின் நீளமானது 120 செ.மீட்டர் ஆகும். வழக்கத்தை விட அடாப்டர் பெரியதாக இருந்தாலும் போலி என்று கண்டுபிடிக்கலாம்.

இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் ஸ்மார்ட் போன்களில் முன்னிலை வகிக்கின்ற போன் தான் “ஒன் ப்ளஸ்”.

ஒன் ப்ளஸ் போனுக்கென டேஷ் சார்ஜர் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சார்ஜரில் போனை சார்ஜரில் போட்டால் வழக்கமாக வரும் பேட்டரி சிம்பல் காட்டாமல் “ஃப்ளாஷ்” சிம்பல் காட்டும். இதில் இருந்தே போலியான சார்ஜரை கண்டுபிடித்திடலாம்.

ஹூவாய் போன்களும் பிரபலமான போன்களில் ஒன்று அதிகப்படியான இலவச சேவைகளை கொண்டது.

இந்த போனின் போலி சார்ஜர்களை குறைப்பதற்காக சார்ஜரின் அடாப்டரில் “பார் கோட்” இருக்கும் இதன் மூலம் எளிதில் கண்டு பிடித்திடலாம்.

உலகையே தன் கைக்குள் வைத்திருக்கும் கூகுள் நிறுவனத்தின் கூகுள் பிக்சல் போன்

கூகுள் பிக்சல் போனின் போலி சார்ஜர்கள் சந்தையில் அதிகமாக கிடைக்கின்றன. அதில் சார்ஜர் ஏறும் வேகத்தை வைத்து எளிதில் கண்டுபடிக்கலாம்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!