பானை போன்று வயிறு வீங்கி இருப்பது எந்த நோய்களின் அறிகுறிகள்… முதல்ல இத படிங்க..!


எம்மில் பலருக்கு வயிறு உப்பியோ அல்லது வீங்கியோ காணப்படும். ஆண்களாயினும் சரி, பெண்களாயினும் சரி வயிறு பெருத்துக் காணப்படுவதை நாம் கண்டிருக்கின்றோம். இதனால் குறிப்பாக பெண்கள் மனமுடைந்து போவதுண்டு.

வயிறு உப்பிக் காணப்படுவதோடு வாய்வு மற்றும் ஏப்பம் போகுதல் போன்றனவும் ஏற்படும். அதிகளவு உணவு உட்கொள்ளுதல், வளியையும் சேர்த்து விழுங்குதல், கார்பனேட்டட் பானங்களை அதிகளவில் பருகுதல், குறிப்பாக சில மரக்கறி வகைகளை உண்ணுதல் மற்றும் லக்டோஸ் ஒவ்வாமை போன்ற காரணங்களால் இந்த நிலைமை ஏற்படலாம். எனினும், சில சமயங்களில் ஆபத்தான விளைவுகளை உணர்த்தவும் இவ்வாறு வயிறு உப்பிக் காணப்படலாம்.

அவை என்ன என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

01. எடை குறைதல்
அடி வயிறு உப்பிக் காணப்படுவதுடன் உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளாமலேயே எடை குறைவடைகின்றது எனில் அது புற்றுநோய்க்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம்.

02. காய்ச்சல்
வயிறு உப்பிக் காணப்படும் அதே சமயம், 100 டிகிரி பரனைட்டிற்கு மேலாக வெப்பநிலை காணப்படுமாயின் அது தொற்று ஏற்பட்டுள்ளதைக் குறிக்கும்.


03. ஈரல் பாதிப்பு
கண்கள் அல்லது தோலின் நிறம் மஞ்சளாக மாறிக் காணப்படும் அதே சமயம் வயிறும் உப்பிக் காணப்படுமாயின் ஈரல் பாதிக்கப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.

04. பிறப்புறுப்பிலிருந்து இரத்தக் கசிவு அல்லது மலத்தில் இரத்தம் வெளியேறல்
வயிறு உப்பிக் காணப்படும் அதே சமயம் மலத்தினூடாக இரத்தம் சகிதல் அல்லது பெண்களின் பிறப்புறுப்பின் ஊடாக இரத்தக் கசிவு ஏற்படுதல் கருப்பையில் பைப்ரொய்ட் கட்டிகள் இருப்பதனை குறிக்கலாம்.

05. பெருங்குடலில் அழற்சி
பெருங்குடலில் அழற்சி ஏற்படுமாயின் அது வலியை ஏற்படுத்துவதுடன் அடி வயிறையும் உப்பச் செய்யும்.

06. இடுப்பு வலி
பெண்களின் இனப்பெருக்கத் தொகுதியில் ஏதேனும் தொற்று ஏற்படின் அதன் போது அடிவயிறு வீங்கிக் காணப்படும். அத்துடன் கசிவும் ஏற்படும்.

இந்த வயிறு வீக்கத்தை எவ்வாறு தடுக்கலாம்?
01. பைபர் அதிகளவில் உள்ள உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
02. அதிகளவு தண்ணீர் பருகுதல் வேண்டும்.
03. கார்பனேட்டட் பானங்கள் அருந்துவது மற்றும் சுவிங்கம் சாப்பிடுதல் போன்றவற்றைக் குறைத்தல் வேண்டும்.
04. சாப்பிடும் போது அதிக நேரம் மென்று விழுங்குவதையும் உணவை குறைவாக உட்கொள்வதையும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
05. போஞ்சிகள், புரொக்கோலி மற்றும் பொரித்த உணவு வகைகளை உட்கொள்வதை குறைக்க வேண்டும்.
06. புகைப் பிடிப்பதை நிறுத்த வேண்டும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!