வீட்டிலேயே காய்ச்சலை குணப்படுத்த எளிய 7 வழிமுறைகள் இதோ..!


உடல் வெப்பநிலை 98.6 பரடே அளவை விட அதிகமானால் அதனைக் காய்ச்சல் என்று கூறுகின்றனர். காய்ச்சல் வருவதற்கான காரணம் உடலில் நுண்ணங்கிகள், வைரஸ் தொற்றுக்கள் ஏற்பட்டு விட்டாலோ அல்லது வேறு நோய்கள் வருவதற்கான முதல் அறிகுறியாகவோ இது காணப்படுகின்றது.

காய்ச்சல் வந்தாலே உடல் சோர்வடைதல், தலைச் சுற்று, தலைவலி, வாந்தி, தொண்டை வலி, மூட்டு வலி போன்ற பல அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து விடும். நீங்கள் அணைவருமே காய்ச்சல் வந்தாலோ அல்லது அதற்கான் அறிகுறிகள் தென்பட்டாலோ உடனே வைத்தியரை நாடுவதையே பழக்கமாக வைத்துள்ளீர்கள். ஆனால் காய்ச்சலை பக்க விளைவுகள் இன்றி இலகுவாக வீட்டு வைத்திய முறையில் இலகுவாகக் குணப்படுத்த முடியும்.

காய்ச்சலை வீட்டிலேயே குணப்படுத்துவது எப்படி?

1.துளசி.
மூலிகைச் செடியான துளசிக்கு காய்ச்சலைக் குணப்படுத்தும் தன்மை உள்ளது.
20 துளசி இலைகளையும் நசுக்கப்பட்ட இஞ்சியையும் ஒரு கோப்பை நீரில் கலந்து, அதில் சிறிதளவு தேனையும் கலந்து தினமும் 2 அல்லது 3 வேளைகள் குடிப்பதனால் காய்ச்சல் குணமாகும்.

2.ஆப்பிள் சிடர் விநாகிரி.
ஆப்பிள் சிடர் விநாகிரியில் உள்ள அமிலத் தன்மை உடலில் உள்ள வெப்பத்தை இலகுவாக வெளியேற்ற உதவுகிறது.

அரைக் கோப்பை ஆப்பிள் சிடர் விநாகிரியை நீருடன் கலந்து, அதனைப் பயன்படுத்தி சருமத்தைக் கழுவினால் விரைவாக வெப்பம் குறைவடைந்து விடும்.


3.உலர் திராட்சை.
உலர் திராட்சையில் பீனோலிக் தாவர ஊட்டச்சத்துக்களான அண்டிஒக்ஸிடன் மற்றும் பக்டீரியாத் தொற்றுக்களிற்கு எதிராகவும் செயற்படும் தன்மையும் உள்ளது.

25 உலர் திராட்சை எடுத்து ஒரு கோப்பை நீரில் ஒரு மணி நேரம் வரை ஊற விடவும். பின்பு திராட்சையை மசித்து அதில் சிறிதளவு எலுமிச்சைப் பழச் சாற்றைக் கலந்து தினமும் இரு வேளைகள் குடிக்கவும்.

4.பூண்டு.
உணவிற்குப் பயன்படுத்தும் பூண்டினை காய்ச்சலுக்கு பயன்படுத்துவதனால் உடலில் உள்ள நச்சுத் தன்மையை வெளியேற்றி விடும்.
நறுக்கப்பட்ட பூண்டினை ஒரு கோப்பை நீரில் கலந்து 10 நிமிடங்கள் வரை ஊற விடவும். தினமும் இரு தடவைகள் இந்த நீரைக் குடிக்கவும்.

5.இஞ்சி
இஞ்சி வைரஸ் மற்றும் பக்டீரியாத் தொற்றுக்களிற்கு எதிராகச் செயற்படும் தன்மை உள்ளதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
சூடான நீரில் நறுக்கப்பட்ட இஞ்சியை கலந்து சிறிது நேரம் ஊற வைத்த பின்பு அதில் தேன் கலந்து குடிக்கவும்.
6. புதினா.
புதினாக்கு உடலின் உள்ளுறுப்புக்களை குளிர்மைப்படுத்தும் உள்ளதனால் காய்ச்சலைக் குணப்படுத்தும்.

சில நறுக்கப்பட்ட புதினா இலைகளை சூடான நீரில் கலந்து ஊற வைத்து அதில் சிறிதளவு தேன் கலந்து குடிக்கவும்.

7.முட்டை வெள்ளைக் கரு.
முட்டை வெள்ளைக் கரு உடனடியாக உடல் வெப்பத்தை உறிஞ்சும் தன்மை உள்ளது.
முட்டையில் இருந்து வெள்ளைக் கருவை தனியாகப் பிரித்தெடுத்து அதனை பேப்பரில் நனைத்து பாதத்தில் வைக்கவும். தானக உலர்ந்த பின்பு கால்களைக் கழுவவும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!