தினமும் பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள்!!!


சருமத்தை இயற்கையாக பராமரிப்பது எனும் போது நம் எல்லோரதும் ஞாபகத்திற்கு வரும் முதல் விடயம் மஞ்சள் தூளே ஆகும். இந்த மஞ்சள் தூள் சமைப்பதற்கு பயன்படுத்தப்படுவதுடன் சரும பாதுகாப்பிற்கும் பயன்படுத்தப் படுகின்றது.

முகப்பரு, முகம்சிவத்தல், அழற்சி, கரும்புள்ளிகள், கருவளையங்கள், தேவையற்ற உரோமங்களை அகற்ற மற்றும் சுருக்கங்களை நீக்க என பல்வேறு விடயங்களுக்காக இந்த மஞ்சள் பயன்படுத்தப்படுகின்றது.

மஞ்சளை இது போன்ற தேவைகளுக்காக நாம் வீட்டிலேயே எவ்வாறு தயாரித்துக் கொள்வது என்பதைப் பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
01. ஒரு கோப்பை பால்
02. அரை தேக்கரண்டி அரைத்த மஞ்சள்
03. கால் தேக்கரண்டி மிளகு
04. ஒரு தேக்கரண்டி தேன்
05. அரைத் தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்
06. நறுக்கிய பச்சை ஏலக்காய்
07. இலவங்கப்பட்டை ஒன்று


செய்முறை
பாலை கொதிக்க வைத்து ஏலக்காய் மற்றும் இலவங்கப் பட்டை ஆகியவற்றை கலந்து கொள்ளுங்கள். பின்னர்மஞ்சள், மிளகு மற்றும் தேன் ஆகியவற்றைக் கலந்து இடைவிடாது கலக்கிக் கொள்ளவும். இந்தக் கலவையிலிருந்து ஆவி வெளியேறும் வரை கலக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதிலுள்ள ஏலக்காய் மற்றும் இலவங்கப் பட்டை ஆகியவற்றை வடித்து எடுத்து அருந்த வேண்டும்.

மஞ்சள் பால் அருந்துவதால் ஏற்படும் அனுகூலங்கள்
01. அல்ஸைமர் நோய் தடுக்கப்படும்
02. நீரிழிவு கட்டுப்படுத்தப்படும்
03. ஆத்தரைட்டிஸ் தடுக்கப்படும்
04. காயங்கள்ஆறும்
05. புற்று நோய்தடுக்கப்படும்
06. ஈரல் சுத்திகரிக்கப்படும்
07. இதயம் பாதுகாக்கப்படும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!