முன்னோர்கள் ஏன் சோற்றை இப்படி சமைக்க வேண்டும் என சொன்னார்கள் தெரியுமா..?


உணவு எனும் போது நாம் அனைவரும் பொதுவாக சோறு உண்பதற்கே பழக்கப் பட்டிருக்கின்றோம். இந்தச் சோறை சத்துள்ள முறையில் எவ்வாறு சமைப்பது என்பது பற்றி பார்ப்போம்.

சோறில் உள்ள சத்துக்களை உறிஞ்சும் வகையில் நாம் சோறு சமைக்கும் போது தேங்காய் எண்ணெய் சேர்க்க வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்களா?

இந்த முறையை எம் முன்னோர்கள் கடைபிடித்திருந்தார்கள். எனினும் காலப் போக்கில் இந்த முறையை பின்பற்றுவது குறைந்து கொண்டே வந்து தற்போது பலருக்கு இதைப் பற்றி தெரியாமலிருக்கின்றது. எனவே தேங்காய் எண்ணெய் விட்டு எவ்வாறு சோறு சமைப்பது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.


தேவையான பொருட்கள்
01. இரண்டு கோப்பை தண்ணீர்
02. ஒரு மேசைக் கரண்டி தேங்காய் எண்ணெய்
03. ஒரு கோப்பை அரிசி

செய்முறை
தண்ணீருடன் தேங்காய் எண்ணெயை கலந்து அதனை கொதிக்க விட வேண்டும். பின்னர் அரிசியை கலந்து 20 நிமிடங்கள் சமைக்க வேண்டும். பின்னர் அதனை 12 மணித்தியாலங்களுக்கு குளிரூட்டியில் வைக்க வேண்டும். சாப்பாட்டிற்கு எடுக்கும் போது குளிராகவோ அல்லது மீண்டும் சூடாக்கியோ இதனை உட்கொள்ளலாம். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!