சிறுநீரக வியாதிகளை முற்றிலும் குணப்படுத்த மூதாதையர் சொன்ன அருமையான மூலிகை.!


சம்பொங் என அழைக்கப்படும் தாவர வகையானது வெப்ப காலநிலை கொண்ட பிலிப்பைன்ஸ், இந்தியா, ஆபிரிக்கா மற்றும் கிழக்கு ஹிமாலய பகுதிகளில் அதிகளவில் வளரும் தாவரம் ஒன்றாகும்.

இந்த தாவரம் உடம்பில் உள்ள தேவையற்ற நீரை அகற்ற உதவுவதோடு சிறுநீரகத்தையும் சுத்தம் செய்யும் வல்லமை கொண்டது. சிறுநீரகத்தில் கற்கள் காணப்படின் அவற்றை சிறுநீர் மூலம் வெளியேற்றும் தன்மை கொண்டது. ஆக மொத்தத்தில் சிறுநீரக வியாதிகளை குணமாக்கும் வல்லமை கொண்டது எனலாம்.


இந்த தாவரத்தின் இலைகளை எவ்வாறு உட்கொள்வது எனக் கேட்டீர்களானால் தேநீராக தயார் செய்து உட்கொள்வதே சிறந்தது எனலாம். இதனை எவ்வாறு தயார் செய்வது எனப் பார்ப்போம்.
சம்பொங் இலைகளை எடுத்து சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அவற்றை ஓடும் நீரில் கழுவ வேண்டும். பின்னர் அவற்றை கொதிக்கும் ஒரு லீட்டர் நீரில் 10 நிமிடங்களுக்கு இட்டு கொதிக்க விட வேண்டும். அதன் பின்னர் அதனை ஆற விட வேண்டும்.


சிறுநீரகத்திற்கு மாத்திரமல்லாது ஆத்தரைட்டிஸ் மற்றும் இருமல் ஆகியவற்றிற்கும் இது சிறந்த நிவாரணியாகும். மேலும் காய்ச்சலையும் இந்த தாவரம் குணப்படுத்துகிறது.

சம்பொங் இலையை நொறுக்கி அதனை குளிர் நீரில் இட்டு வைத்திருந்து பின்னர் பழிந்தெடுத்து அதனை சுத்தமான துணித்துண்டு ஒன்றில் இடுதல் வேண்டும். அதன் பின்னர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவரின் நெற்றி அல்லது அக்குள் பகுதியில் அதனை வைத்தல் வேண்டும். இதன் மூலம் காய்ச்சல் குறைவடையும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!