அடிக்கடி கால் வீக்கமா..? அப்படியானால் இவை தான் காரணம்…!


உங்கள் கால்கள் அடிக்கடி வீங்குகின்றனவா? இதற்கு செல்களில் தண்ணீர் தங்குவதும் காரணமாகலாம். இவ்வாறு செல்களில் தண்ணீர் தங்குவதற்கு என்ன காரணம்?

01. செயலற்றிருத்தல்
பொதுவாக வைத்தியசாலையில் படுக்கையிலேயே இருப்பவர்கள் அல்லது சக்கரநாற்காலியில் இருப்பவர்கள் இந்த நிலைக்கு முகங்கொடுப்பர். குறித்த நிலை மாறகால்களை அசைப்பது முக்கியம்.

02. ஹோர்மோன் மட்டம்
இன்சுலின், கோர்டிசோன், ஈஸ்ட்ரஜன், மற்றும் புரொஜெஸ்டரோன் என்பன அதிகளவில் காணப்படும் போது உடம்பானது அதிகளவு நீரை சேமித்து வைக்கும். அதிகரித்த ஹோர்மோன்கள் சோடியத்துடன் தாக்கம் புரிவதால் நீர் அதிகளவில் சேமிக்கப்படுகிறது. இதற்குத் தகுந்த மருந்தை உட்கொள்வதன் மூலம் இப் பிரச்சினையிலிருந்து விடுதலையடையலாம்.

03. உப்பு
கால்கள் வீங்குவதற்கு நாம் அதிகளவில் உப்பு உட்கொள்வதும் காரணமாக அமைகின்றது. இதனால் நாம் உட்கொள்ளும் உப்பை குறைத்துக் கொள்வதன் மூலமாக இதிலிருந்து விடுபடலாம்.

கால்வீக்கத்தை குறைக்க உதவும் எண்ணெய் வகைகள்

01. பெருஞ்சீரக எண்ணெய்
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கத் தேவையான விட்டமின்கள் மற்றும் கனியுப்புக்கள் என்பன இதில் அதிகளவு உள்ளன. இதன் மூலம், அழற்சி ஏற்படுவது குறைக்கப்பட்டு கால்களில் தங்கியுள்ள நீர் அகற்றப்படும்.


பயன்படுத்தும் முறை: 1 – 2 துளிகள் பெருஞ்சீரக எண்ணெயை தண்ணீரில் அல்லது கெமொமைல்தே நீரில் கலந்து கால்களில் பூச இந்த நிலைமை குறையும்.

02. லெவென்டர் எண்ணெய்
தூக்கமின்மை, அழற்சி மற்றும் தலைவலி என்பவற்றை குணப்படுத்தும் வல்லமை கொண்டது.
பயன்படுத்தும் முறை: 2 – 3 துளிகள் லெவன்டர் எண்ணெயை கால்களில் பூசிவர வீக்கம் குறையும்.

03. யூகலிப்டஸ் எண்ணெய்
உடல் நோவு மற்றும் அழற்சியை குறைக்கும் வல்லமை கொண்டது. அத்துடன் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும்.

பயன்படுத்தும் முறை: ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயைக் கலந்து வீக்கம் உள்ள இடத்தில் பூசிவர வீக்கம் குறையும்.
04. திராட்சை எண்ணெய்
உடலில் உள்ள தேவையற்ற திரவங்களை அகற்றுவதோடு நோயெதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கச் செய்து இரத்த ஓட்டத்தையும் சீராக்கும் வல்லமை கொண்டது.

பயன்படுத்தும் முறை: தேங்காய் எண்ணெயுடன் 3 துளிகள் திராட்சை எண்ணெயை கலந்து வீக்கம் உள்ள இடத்தில் பூச வேண்டும். நாளொன்றுக்கு 2 தொடக்கம் 3 முறை பூசுதல் சிறந்தது. – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!