ஃபுல் இன்ச் டிஸ்ப்ளே +24 எ்மபி செல்ஃபி கேமரா கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்…!


விவோ நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. ஃபுல் இன்ச் டிஸ்ப்ளே கொண்ட புதிய ஸ்மார்ட்போனின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

விவிோ நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபுல் இன்ச் டிஸ்ப்ளே கொண்ட புதிய விவோ வி7 ஸ்மார்ட்போன் முன்னதாக இந்தோனேஷியாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

5.7 இன்ச் ஃபுல் இன்ச் 1440×720 பிக்சல் ஃபுல் வியூ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. முன்னதாக இந்நிறுவனம் வெளியிட்ட விவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் ஃபுல் வியூ டிஸ்ப்ளே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனினும் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 24 எ்மபி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.


ஐபோன் X ஸ்மார்ட்போன் போன்றே ஃபேஸ் அன்லாக் செய்யும் வசதி, போர்டிரெயிட் மோட் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் விவோ வி7 கேமரா கொண்டு புகைப்படங்களை அதிக துல்லியமாகவும், அழகாகவும் படமாக்க முடியும்.

விவோ வி7 சிறப்பம்சங்கள்:

– 5.7 இன்ச் 1440×720 பிக்சல் 18:9 ஃபுல்வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்
– அட்ரினோ 506 GPU
– 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஃபன்டச் ஓ.எஸ். 3.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட்
– டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.0 அப்ரேச்சர்
– 24 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.0 அப்ரேச்சர்
– கைரேகை ஸ்கேனர்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 எம்ஏஎச் பேட்டரி

மேட் பிளாக் மற்றும் ஷேம்பெயின் கோல்டு நிறங்களில் கிடைக்கும் விவோ வி7 ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.18,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் விவோ வி7 முன்பதிவுகள் துவங்கியுள்ள நிலையில், விற்பனை நவம்பர் 24-ம் தேதி துவங்குகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!