பேன் தொல்லையா..? அல்ககோலை இப்படியும் பயன்படுத்த முடியுமா?


அல்ககோல் என்றாலே போதை என்ற எண்ணமே முதலில் எல்லோர் மனதிலும் தோன்றுகிறது. ஆனால் இதனை பல ஒப்பனைப் பொருட்களிலும், தொற்று நீக்கிகளிலும் சிறிதளவில் பயன்படுத்தி வருவது அணைவரும் அறிந்ததே. இதனை உங்கள் படுக்கை மற்றும் தலையணைகளில் பயன்படுத்தியுள்ளீர்களா? இதனை படுக்கை மற்றும் தலையணைகளில் தெளிப்பதனால் மூட்டைப் பூச்சி தொல்லைகளில் இருந்து சிறந்த தீர்வைத் தருகிறது.

அல்ககோலை வேறு எதற்காக பயனபடுத்துகிறார்கள்?

1. வாய்ப்புண்ணை குணப்படுத்துவதற்கு
வாய்ப் புண்ணால் பாதிக்கப்படும் வேளைகளில் அல்கோலை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுவதனால் விரைவாக குணமடைந்து விடும்.

2. டியோட்ரண்டாக பயன்படுத்த முடியும்.
சிறிதளவு அல்ககோலை அக்குள் பகுதிகளில் தேய்ப்பதனால் துர்நாற்றம் வராமல் தடுக்கும். ஆனால் தொடர்ச்சியாக அல்ககோல் பயன்படுத்துவதனால் சரும எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

3. சரும பகுதிகளில் உள்ள உடைந்த முடிகளை நீக்குவதற்கு.
தேவையற்ற முடிகளை அக்குள் பகுதிகளில் இருந்து நீக்கிய பின்பு அல்ககோலால் தேய்ப்பதனால் உடைந்த முடிகளை இலகுவாக நீக்குவதுடன் எரிச்சலையும் குணப்படுத்தும்.

4. குளிர் கட்டியாக பயன்படுத்தல்.
அடைக்கப்பட்ட பொலித்தீன் பையினுள் நீரையும் அல்ககோலையும் இரண்டிற்கு ஓன்று என்ற விகிதத்தில் கலந்து குளிரூட்டியில் வைத்து ஒரு மணி நேரத்தின் பின் அதனை பொருட்களை குளிரான நிலையில் வெளியே எடுத்து செல்வதற்கு பயன்படுத்துவார்கள்.


5. சரும சுத்திகளாக பயன்படுத்தல்
இதனை பாதிக்கப்பட்ட சருமங்களில் சுத்திகளாக பயன்படுத்துவதனால் பருக்களில் உள்ள தொற்றுக்கள் நீங்கி சருமப் பிரச்சினைகள் குறைவடையும்.

6. நகப் பூச்சை நீக்குவதற்கு.
நகப் பூச்சுக்களை இலகுவாக நீக்குவதற்கு அல்ககோலை பயன்படுத்துவது சிறந்தது.

7. காதுகளை சுத்தப்படுத்துவதற்கு.
காதில் அழுக்குகள் அதிகமாகும் போது சிறிதளவு அல்க்கோலுடன் வெள்ளை விநாகிரியைக் கலந்து அதனை பஞ்சினால் எடுத்து துளிகளாக காதினுள் விடுவதனால் அழுக்குகளை இலகுவாக நீக்க முடியும்.

8. பேன் தொல்லைகளில் இருந்து விடுபடுவதற்கு.
ஒரு தெளிப்பானில் சிறிதளவு அல்ககோலை எடுத்து அதில் லாவண்டர் எண்ணெய்யை சிறிதளவு சேர்த்து தலையில் தெளித்து சீப்பினால் வாருவதன் மூலம் பேன்களை அகற்ற முடியும்.

9. கைகளின் தொற்று நீக்கியாக செயற்படுதல்.
அரைத் தேக்கரண்டி அல்ககோலுடன் சில துளி தேயிலை மர எண்ணெய்யுடன் 4 அவுண்ஸ் கற்றாளைச் சாற்றை சேர்த்து கைகளிற்கான தொற்று நீக்கியாக தயாரித்து வீடுகளில் பயன்படுத்திக் கொள்ள முடியும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!