அடிக்கடி மயக்கம் வருவதற்கு என்ன காரணங்கள் தெரியுமா..? அலட்சியம் வேண்டாம்..!


உங்களுக்கு மயக்கம் வருகின்றதா? சிலருக்கு அடிக்கடி மயக்கம் ஏற்படும். ஒரு சிலருக்கு அவ்வப் போது மயக்கம் வரும். அடிக்கடி மயக்கம் வருபவர்கள் கட்டாயம் வைத்தியரை நாட வேண்டும். இல்லையேல் மயக்கம் மற்றும் சோர்வு என்பன ஒரு நாள் உங்களை கீழே வீழ்த்துவது மட்டுமல்லாது நோயிலும் வீழ்த்திவிடும்.

திடீரென மயக்கம் வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று இப்போது பார்ப்போம்.

01. இரத்தத்தில் குறைந்தளவு சர்க்கரை காணப்படல்
எமது இரத்தத்தில் தேவைக்கேற்ப குளுக்கோஸ் காணப்பட வேண்டும். அவ்வாறு இல்லையேல் மயக்கம் ஏற்படும். விரைவான இதயத்துடிப்பு, வியர்த்தல், நடுக்கம், பசி மற்றும் குழப்பம் என்பன இதன் அறிகுறிகளாகும்.

02. குறை இரத்த அழுத்தம்
எமது உடலில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இரத்தம் செல்வதற்கு அழுத்தம் தேவைப்படுகின்றது. இந்த அழுத்தம் குறைவாகக் காணப்படும் போது இரத்தம் செல்வது குறைவடைகின்றது. இதனால் மயக்கம் ஏற்படுகின்றது. குமட்டல், தாகம், மங்கலான பார்வை மற்றும் தோல் வெளுத்துப் போதல் என்பன இதன் அறிகுறிகளாகும்.

03. எமது உடம்பில் உள்ள செங்குருதிச் சிறுதுணிக்கைகளின் அளவு குறைவடையும் போது இரத்த சோகை ஏற்படும். இந்த நிலைமையின் போதும் மயக்கம் வரும்.

04. ஒற்றைத் தலை வலி
ஒற்றைத் தலைவலி ஏற்படும் போதும் சிலருக்கு மயக்கம் வரும். பார்வை மங்குதல், வெளிச்சத்தை பார்க்க முடியாதிருத்தல், குமட்டல், வாந்திபேதி மற்றும் சோர்வு என்பன இதன் அறிகுறிகளாகும்.

05. மருந்து வகைகள்
சில மருந்து வகைகளை தொடர்ந்து உட்கொள்ளும் போதும் இந்த மயக்கம் ஏற்படும்.

06. வழமைக்கு மாறான இதயத் துடிப்பு
இதயத் துடிப்பில் ஏதேனும் வித்தியாசம் இருப்பினும் மயக்கம் ஏற்படும். சிலருக்கு இதயம் விரைவாகத் துடிக்கும். இன்னும் சிலருக்கு இதயம் துடிப்பது குறைவாக இருக்கும்.

07. சோர்வு
ஒரு சிலருக்கு அதிக சோர்வு காரணமாகவும் மயக்கம் ஏற்படும். தலைவலி, நெடுநேரம் வேலை செய்தல், தூக்கமின்மை, அழற்சி மற்றும் தசை அல்லது மூட்டுவலி என்பன சோர்வை ஏற்படுத்தக் கூடிய காரணிகள் ஆகும்.

08. உடல் வறட்சியடைதல்
உடலில் போதுமான அளவு நீர் இல்லாத காரணத்தாலும் மயக்கம் ஏற்படும்.
ஆகவே திடீரென ஏற்படும் மயக்கத்தை புறக்கணிக்கக் கூடாது என்பதை மனதில் கொள்ளுங்கள். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!