மஞ்சள் காய்ச்சலால் உயிருக்கே ஆபத்தாம்… அலட்சியம் வேண்டாம் – எச்சரிக்கை தகவல்..!!


மஞ்சள் காய்ச்சல் என்பது நுளம்புகளால் பரவும் ஒரு உயிர்க் கொல்லி நோயாகும். இதனை ஆங்கிலத்தில் ஜோன்டிஸ் என அழைப்பர்.

இந்தக் காய்ச்சல் ஏற்படும் போது கண்கள் மற்றும் தோலின் நிறம் மஞ்சள் நிறமாக மாறும். இதனாலேயே இந்தக் காய்ச்சலுக்கு மஞ்சள் காய்ச்சல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தக் காய்ச்சல் ஒருவருக்கு ஏற்பட்டால் அதனைக் குணப்படுத்த முடியாது. எனினும், காய்ச்சல் வரும் முன் தடுப்பதற்கு ஏற்றவாறு தடுப்பூசி ஏற்றிக் கொள்வதன் மூலம் இதிலிருந்து தப்பிக்கலாம்.

மஞ்சள் காய்ச்சலின் அறிகுறிகள்
01. தலைவலி
02. தசைகளில் வலி
03. மூட்டுவலி
04. குளிர்
05. காய்ச்சல்

இந்தக் காய்ச்சல் அதிகரிக்கும் பட்சத்தில் தலை வலி, மூட்டு வலி, காய்ச்சல், நடுக்கம், பசியின்மை மற்றும் முதுகு வலி போன்றன ஏற்படும். சிலர் இந்தக் கட்டத்தை தாண்டி விட்டார்களேயானால் அவர்கள் குணமடைந்து விடுவர். ஆனால் இன்னும் சிலர் இந்தக் கட்டத்தை தாண்டியதன் பின்னர் மேன்மேலும் பாதிக்கப்படுவர்.

அதன் போது சிறுநீர் கழிப்பதில் சிரமம், அடிவயிற்றில் வலி, வாந்தி, இதயத் துடிப்பில் வித்தியாசம், கண்கள் மூக்கு மற்றும் வாயிலிருந்து இரத்தம் வடிதல் என்பன ஏற்படும்.

எனினும், மஞ்சள் காய்ச்சல் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தோன்றும் போதே வைத்தியரை நாடுதல் முக்கியம். மஞ்சள் காய்ச்சல் வருவதற்கு முன்னதாகவே தடுப்பூசி ஏற்றுவதே மிகச் சிறந்தது. – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!