ஒரே ஒரு வாழைப்பழ தோல் போதும்.. தலைவலியை எளிதில் குணமாக்க.. எப்படி தெரியுமா…?


நாம் வாழைப்பழம் சாப்பிடும் போது, அதன் தோலை தூக்கி எறிந்துவிடுவது இயல்பு.

ஆனால், வாழைப்பழத்தை போன்றே, அதன் தோலிலும் அதிகமான நன்மைகள் உள்ளது.

இது தெரியாமல், நாம் இத்தனை நாட்கள் வாழைப்பழ தோலை தூக்கி எறிந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால்.., அதே வாழைப்பழத் தோலைக் கொண்டு, அன்றாடம் பெரும்பாலானோர் சந்திக்கும் ஓர் பிரச்சனையில் இருந்து விடுபட முடியும்.

நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் தலைவலி.


தலைவலி வந்தால், அது தலைப்பகுதியை கடுமையாக பாதித்து, எந்த ஒரு செயலையும் செய்ய முடியாமல் செய்துவிடும்.

சிலருக்கு தலையின் இரு பக்கமும், இன்னும் சிலருக்கு ஏதேனும் ஒரு பக்கம் மட்டும் வலிக்கவும் செய்யும்.

இப்படி ஒரு பக்கம் மட்டும் வலிப்பதற்கு ஒற்றைத் தலைவலி என்று கூறுவார்கள்.

தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க, பக்க விளைவுகளை ஏற்படுத்தும் மாத்திரைகளை நாம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம்.


ஆனால், ஒரே ஒரு வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு தலைவலியை எளிதில் குணப்படுத்த முடியும்.

வாழைப்பழத் தோலின் உட்பகுதியில் ஐஸ் கட்டியை வைத்து ஒட்டும் டேப் கொண்டு தோலுடன் சேர்த்து ஒட்டி, பின் தரையில் படுத்து, நெற்றியின் மேல் வாழைப்பழத் தோலை இருபது நிமிடம் வைத்திருக்க வேண்டும்.

குறிப்பாக கையில் ஒரு துணியை வைத்துக் கொண்டு, நெற்றியில் இருந்து வழியும் நீரை துடைத்துக் கொள்ளுங்கள்.


தலை வலி ஏற்படும் போது., வாழைப்பழத் தோல் முறையை பின்பற்றினால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இதற்கு காரணம்., வாழைப்பழத் தோலில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் தான். இது தான் வலியில் இருந்து விடுபட உதவுகிறது.

ஒருவேளை தலைவலி இருபது நிமிடத்திற்கும் மேலும் நீடித்தால், மற்றொரு முறை இந்த முறையை பின்பற்றுங்கள்.

வாழைப்பழத் தோலின் உட்பகுதியைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்தால், சருமம் அழகாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!