இந்த பழக்கவழக்கங்களை வைத்து நீங்கள் எப்படிப் பட்டவர் என ஈசியா கண்டுபிடிக்கலாம்..!


நாம் உண்ணும் உணவு வகைகள் மற்றும் எமது பழக்கவழக்கங்களை வைத்தே எம்மைப் பற்றி கணித்துவிட முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா?

ஆம், மேற்குறிப்பிட்டவற்றைக் கொண்டு ஒரு மனிதனது மறைமுகமான குணவியல்புகளைக் கண்டறிய முடியும் எனகிறது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று.

அவை என்ன என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

01. இயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட உணவு வகைகள்
வீட்டில் உருவாக்கப்பட்ட காய்கறி வகைகள் மற்றும் இயற்கையானதும் நல்ல முறையிலும் உருவாக்கப்பட்டதுமான உணவு வகைகளை தெரிவுசெய்து உண்ணுவோர் ஏனையோரை எடை போடும் தன்மை கொண்டவர்கள். நெறிமுறை தவறி நடப்பது பிழையில்லை என நினைப்பவர்கள்.

02. செயற்கையான முறையில் தோலின் நிறத்தை பொதுநிறமாக மாற்ற முனைதல்
மேலைத்தேய நாடுகளில் பொதுவாக வெள்ளைநிற தோல் கொண்டவர்கள் சூரியஒளி படும் வேளைகளில் தங்களது உடலிலும் சூரியஒளி படும்படி படுத்து தங்களது தோலின் நிறத்தை பொது நிறமாக மாற்றுவதில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள்.

இந்தப்பழக்கம் ஆசிய நாடுகளில் இல்லை என்று தான் கூற வேண்டும். எனினும், பொது நிறத்தின்பால் உள்ள மோகத்தில் செயற்கையான முறையில் சூரியஒளியை உருவாக்கி அதன் உதவியால் தோலின் நிறத்தை மாற்ற முனைபவர்கள் ஏதாவது ஒரு விடயத்திற்கு அடிமையானவர்களாக இருப்பார்கள். அத்துடன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகுபவர்கள் இவர்களாக இருப்பதற்கு அதிக வாய்ப்புண்டு.

03. குளிர்நீரில் நீராடுதல்
குளிர்நீரில் நீராடுபவர்கள் பொதுவாக மற்றையவர்களின் ஆலோசனைகளை கேட்க விருப்பம் அற்றவர்கள். இவர்களிடம் பிடிவாதகுணம் அதிகமாக இருக்கும். மாறாக சுடுநீரில் நீராடுபவர்கள் தனிமை விரும்பிகளாக இருப்பர்.


04. மின்னஞ்சல்
மின்னஞ்சலில் வரும் தகவல்கள் அல்லது குறுஞ் செய்திகளை வாசிக்க விருப்பமற்றவர்கள் பொதுவாகதங்களைப் பற்றிய அனைத்து விடயங்களையும் கட்டுக்குள் வைத்துக் கொள்பவர்கள். குறுஞ் செய்திகளை படித்து விட்டு அதனை அழிப்பவர்கள் தங்களது பாதுகாப்பு தொடர்பில் அக்கறை கொண்டவர்கள். குறுஞ் செய்திகளை சிறிதளவேனும் கண்டு கொள்ளாதவர்கள் மிகவும் புத்திசாலிகள். ஏனெனில் அவர்களைப் பொருத்தமட்டில் அந்த குறுஞ் செய்திகளை படிப்பதற்கு நேரத்தை செலவழிப்பது வீணாண விடயம் ஆகும்.

05. சமூக வளைத்தளங்கள்
சமூக வளைத்தளங்களில் அதிக நேரம் செலவிடுபவர்கள் எந்த ஒரு விடயம் தொடர்பிலும் முயற்சி செய்வதற்கு விருப்பம் அற்றவர்கள். குறிப்பாக சொல்லப் போனால் இவர்கள் படு சோம்பேறிகள்.

06. கசப்பான உணவுகள்
பொதுவாக கசப்பான உணவு வகைகளை யாரும் விரும்பி உண்பதில்லை. ஆனால் கசப்பான உணவுகளை விரும்பி உண்பவர்களிடம் மனோதத்துவரீதியில் ஏதோ ஒரு குறைபாடு உள்ளது எனலாம். தொடர் கொலைகள் செய்யும் கொலைகாரர்களிடம் இந்த பழக்கவழக்கத்தை காணலாம். இவர்களை சைக்கோ என்கிறது ஆய்வு.

06. டொய்லட் பேப்பர் (மலசலகூடத்தில் உபயோகிக்கும் கடதாசி)
டொய்லட் பேப்பரை மலசலகூடத்தில் வைத்திருக்கும் விதத்தை வைத்து ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை அறியலாம். ஆம், இந்த டொய்லட் பேப்பர் மேலே வைக்கப்பட்டிருந்தால் அவரிடம் சிறந்த தலைமைத்துவ பண்பு இருக்கும். இதுவே மாறாக கீழே வைக்கப்பட்டிருப்பின் அவர் தலைமைத்துவம் வகிப்பதை விட ஒருவரின் கீழ் அடிபணிந்து இருப்பவராக காணப்படுவார்.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!