30 ஆண்டுகளாக கருணாநிதியின் மாறாத ஷெட்யூல்… என்ன தெரியுமா..?


எப்போதுமே கூடு தங்காத பறவை, கருணாநிதி. வேலையே இல்லாவிட்டாலும் பறந்துகொண்டே இருப்பது அவரது பழக்கம்.

சிஐடி காலனி வீட்டில் அதிகாலையில் எழும் கருணாநிதி, தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் வந்து நடைப்பயிற்சி செய்வது வழக்கம்.

பின்னர் கோபாலபுரம் வந்து காலை உணவை முடித்துவிட்டு, கோடம்பாக்கம் முரசொலி அலுவலகம் சென்று உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதுவார்.

அதைத்தொடர்ந்து மதிய உணவுக்காக சிஐடி காலனி வருவார். சிறிது ஓய்வுக்குப் பிறகு 4 மணிக்கு கோபாலபுரம் சென்று பார்வையாளர்களைச் சந்தித்துவிட்டு, 6 மணிக்கு மீண்டும் அண்ணா அறிவாலயம் சென்று விடுவார்.

மீண்டும் இரவு 8.30 மணிக்கு சிஐடி காலனி வீட்டுக்குச் செல்வது என்ற பயணத்திலேயே இருந்தார் கருணாநிதி. கடந்த 2016-ம் ஆண்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் முப்பது ஆண்டுகளாக கருணாநிதியின் மாறாத ஷெட்யூல் இது.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!