வீட்டில் எந்தெந்த தாவரங்களை எங்கு வளர்க்க வேண்டும் தெரியுமா..?


எமது வீட்டை அழகு படுத்தவென விலை உயர்ந்த பொருட்களை வாங்கித்தான் அழகுபடுத்த வேண்டும் என்றில்லை. இயற்கையாகக் கிடைக்கும் அழகிய தாவரங்களைக் கொண்டு கூட எமது வீட்டை அழகு படுத்தலாம்.

அது சரி, எந்தெந்த தாவரங்களை வீட்டின் எந்தப் பகுதியில் வளர்க்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

01. குளியலறை
– பூச்சட்டிகளில் வளரும் சிறிய பாக்கு மரம் – வளியில் உள்ள அமோனியாவை சுத்தம் செய்யும்.

– சைனீஸ் எவர்கிறீன்ஸ் – வளியில் உள்ள ஃபோர்மொல்டிஹைட்டை அகற்றும்.

– ஐரோப்பிய ஐவி – வளியில் உள்ள கார்பன்டைஒக்ஸிட்டை துல்லியமாக உறிஞ்சி வைத்துக் கொள்ளும்.

02. படுக்கையறை
– சான்செவியரியாட்ரி ஃபாசியரியா – இரவில் ஒட்சிசனை வெளிவிடுவதோடு வளியில் உள்ள நச்சுத் தன்மை வாய்ந்த வளியை அகற்றும்.

– ஸ்பாத்திஃபிலம் – வளியில் உள்ள பென்ஸோன், அமோனியா மற்றும் அசிட்டோன் போன்ற வாயுக்களை உறிஞ்சி வைத்துக் கொள்ளும்.

– ஃபலேனோப்சிஸ் – இரவு நேரங்களில் ஒட்சிசனை வெளியிடும்.

03. குழந்தைகளின் படுக்கையறை
– கோப்பித் தாவரம் – வளியில் உள்ள பென்ஸோல் போன்ற நச்சு வாயுக்களை சுத்திகரிக்கும்.

– ஹைபிஸ்கஸ் – இதமான சூழலை உருவாக்குவதோடு சுகாதாரமான காற்றை உருவாக்கும்.

– சைக்ளமென் – தூக்கமின்மை, உடற்சோர்வு, மன அழுத்தம் எரிச்சல் போன்றவற்றை இல்லாதொழிக்கும்.


04. வசிக்கும் அறை
– ட்றசேனாரிப்ளெக்ஸா – வளியில் உள்ள நச்சுத் தன்மை வாய்ந்த பொருட்களை இல்லாதொழிக்கும்.

– குளோரோபைத்தம் – வளியை ஈரலிப்பாக வைத்திருக்கும்.

– பெஞ்சமின்ஃபிக் – வளியில் உள்ள ட்ரைகுளோரோ எதைலினை அகற்றும்.

05. சமையல்அறை
– கற்றாளை – வளியில் உள்ள ஃபோர்மொல்டிஹைட் மற்றும் பென்ஸோல் போன்ற காற்றை அகற்றி சுத்தப்படுத்தும்.

– ஸ்டெபனோட்டிஸ் – சமையலறையில் உள்ள வளியை சுகாதாரமானதாக மாற்றும்.

– செய்ன்ட்போலியா – சமையலறையில் உள்ள எறும்புகளை விரட்டும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!