இந்த உணவுகளை இப்படித் தான் உண்ண வேண்டும்… அட முதல்ல இத தெரிஞ்சிக்கோங்க..!


நமக்கு பிடித்தமான உணவை கண்டு விட்டால் அதனை வாயினுள் மென்று விழுங்கும் வரை நமக்கு பொறுமையே இருக்காது. அதன் போது பெரும்பாலான வேளைகளில் உணவை அங்கும் இங்கும் சிந்துதுதல், கைகளில் எங்கு பார்த்தாலும் உணவுச் சாதம் போன்றவாறான நிலைமைகள் தோன்றும்.

சில உணவுகளை இப்படித் தான் உண்ண வேண்டும் என்று விதிகள் உண்டு. அவை என்ன உணவு, என்ன விதி முறை என்பதை இப்போது பார்ப்போம்.

01. கப்கேக்
கப்கேக் உண்ணுவதற்கு முன்னர் அதன் அடிப்பாகத்தை வெட்டி எடுத்து அதனை கப்கேக்கின் மேற்பகுதியில் வைத்து உண்ண வேண்டும். அப்போது அதிலுள்ள கிறீம் கைகளில் ஒட்டாது. பார்ப்பதற்கும் சன்விட்ச் போல இருக்கும்.

02. தர்பூசணிப் பழம்
தர்சணிப்பழத்தை முதலில் அரைவாசியாக வெட்டிக் கொள்ளுங்கள். பின்னர், அவற்றை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் அதனை இலகுவாகப் பிடித்து உண்பது இலகு.

03. ஒறியோபிஸ்கட்கள்
ஒறியோபிஸ்கட்களை முள்ளுக் கரண்டியொன்றின் உதவியுடன் பிடித்து பாலில் நனைத்து உட்கொள்ளலாம்.

04. சிக்கன் விங்ஸ்
சிக்கன் விங்ஸில் உள்ள எலும்பை முதலில் அகற்றி விட்டு பின்னர் சதைப் பகுதியை அப்படியே மென்று உண்ணலாம்.

05. கிவி பழம்
கிவி பழத்தை அரைவாசியாக வெட்டிக் கொள்ளவும். பின்னர் கரண்டியை உபயோகித்து அதிலுள்ள தசை போன்ற பகுதியை வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

06. பர்கர்
பர்கரை அப்படியே தலை கீழாக பிரட்டவும் பின்னர் ஐந்து விரல்களையும் உபயோகித்து நன்கு பிடித்து கடித்து உண்ணலாம்.


07. மாம்பழம்
மாம்பழத்தை அரைவாசியாக வெட்டிக் கொள்ளவும். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தின் மேற்பகுதியில் வைத்து அழுத்தவும். அப்படிச் செய்தால் அதன் உட்பகுதியில் உள்ள பழம் இலேசாக கழன்று வரும்.

08. பிட்ஸா
பிட்ஸாவை அழகாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதை பாய் போல் சுருட்டி அப்படியே கடித்து உண்ணவும்.

09. காம்புடன் உள்ள சோளம்
கத்தியை உபயோகித்து, காம்பினைப் பிடித்தவாறு வெண்ணெயை தடவுங்கள். பின்னர் அதனை பேக் செய்யுங்கள். பேக் செய்தாகியவுடன் அதனை அப்படியே கோப்பை ஒன்றில் இட்டு பரிமாறுங்கள்.

10. பாஸ்தா
பாஸ்தா பாத்திரத்தில் முள்ளுக்கரண்டி ஒன்றை வைத்து வட்டமாக சுற்றுங்கள். அப்போது முள்ளுக் கரண்டியில் பாஸ்தா வட்டமாக ஒட்டிக் கொள்ளும். அதனை அப்படியே எடுத்து சாப்பிடலாம்.

11. இறால்
முள்ளுக் கரண்டியில் உதவியுடன் இறாலின் நடுப் பகுதியில் குத்தி இழுக்க வேண்டும். அப்போது அதன் தோல் இலகுவாக கழன்று வரும்.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!