இறைச்சியை இப்படி சமைத்து சாப்பிட்டால் ஆபத்து என தெரியுமா..? இத முதல்ல படிங்க..!


இப்போதெல்லாம் மரக்கறி வகைகளை புறந்தள்ளிவிட்டு இறைச்சி வகைகளை உட்கொள்வதிலேயே நம்மவர்கள் அதிக ஈடுபாடு காட்டுகின்றார்கள்.

இறைச்சி வகைகளில் இரும்புச்சத்து பொதிந்துள்ளது தான். ஆனால் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதற்கேற்றாற் போல் நாம் இறைச்சி வகைகளை அதிகளவில் உட்கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

எனினும் இறைச்சி வகைகளை சரியான முறையில் சமைத்து உட்கொள்வதன் மூலம் இதனால் வரும் ஆபத்திலிருந்து விலகியிருக்க முடியும்.

ஆம், இறைச்சி வகைகளை சமைக்கும் போது அதிகூடிய வெப்பநிலையில் சமைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதிகூடிய வெப்பநிலையில் இறைச்சிகளை சமைக்கும் போது இறைச்சியில் உள்ள சில மூலப் பொருட்கள் அதற்கு எதிர்தாக்கம் புரியமுனையும். இந்நிலையில், குறித்த இறைச்சியை உட்கொள்வதனால் மார்பகப் புற்றுநோய் மற்றும் கணையப் புற்றுநோய் என்பன ஏற்பட வாய்ப்புண்டு.

அதுசரி, அப்படியானால் இறைச்சியை எவ்வாறு சமைப்பது உத்தமம் எனக் கேட்கின்றீர்களா?

01. இறைச்சியை பேக் செய்து உண்பது, அவித்து உண்பது, மற்றும் ஸ்டூ செய்து உண்பது சிறந்தது.


02. இறச்சியில் கருகிய பகுதியை உட்கொள்ளாது தவிர்த்தல் நன்று.

03. இறைச்சியை நேரடியாக நெருப்பில் பிடித்து சுடவைப்பதை தவிர்க்க வேண்டும்.

04.150 பாகை செல்சியஸ் அல்லது 300 பாகை பரனைட் இற்கு மேல் வெப்பநிலையை அதிகரித்து சமைப்பதை தவிர்க்க வேண்டும்.

05. ஒலிவ் எண்ணெய், எலுமிச்சம் பழச்சாறு, வெள்ளைப் பூடு அல்லது சிவப்பு வைன் போன்றவற்றில் ஊற வைத்து சமைப்பது பாதிப்புக்களை குறைக்கும்.

மேலே குறிப்பிட்டாற் போல், எமது உடலில் அளவுக்கு மீறிய இரும்புச்சத்து சேருமாயின் அது பாதகமான விளைவுகளை கொண்டு வரும். பொதுவாக பெண்களுக்கு ஏற்படும் மாத விடாய் சுழற்சி காரணமாக இந்த பாதிப்பு தடுக்கப்படுகின்றது. எனினும், ஆண்கள் மற்றும் மாதவிடாய் தடைபட்ட பெண்களுக்கு இதன் பாதிப்பு ஏற்பட வாய்புண்டு.- – © Tamilvoice.com | All Rights
Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!