இந்தியாவில் அறிமுகமாகுகின்றது சாம்சங் கேலக்ஸி ஆன்8 ஸ்மார்ட்போன்..!!


சாம்சங் கேலக்ஸி ஜெ8 ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து கேலக்ஸி ஆன்8 (2018) ஸ்மார்ட்போனினை சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 6.0 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED 18:5:9 ரக இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 450 சிப்செட், 4 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.0 (ஓரியோ) இயங்குதளம் சார்ந்த சாம்சங் UI கொண்டிருக்கிறது.

டூயல் பிரைமரி கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் சாம்சங் மால் ப்ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஆன்8 சிறப்பம்சங்கள்:

– 6.0 இன்ச் 1480×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED 18.5: 9, 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm சிப்செட்
– அட்ரினோ 506 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
– டூயல் சிம்
– 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.7
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.9
– 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஆன்8 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் கேலக்ஸி ஆன்8 விலை ரூ.16,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஆகஸ்டு 6-ம் தேதி முதல் துவங்குகிறது. இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதி, சிறப்பு டேட்டா சலுகை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.source-maalaimalar

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!