குரூப் வீடியோ, ஆடியோ காலிங் வசதியை அறிமுகம் செய்தது வாட்ஸ் அப்…!


குறுந்தகவல்களை பகிர பயன்படுத்தப்படும் சமூக வலைதளமான வாட்ஸ் அப், தங்கள் பயனாளர்களை கவர அவ்வப்போது புதியப்புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

தகவல்களை டெக்ஸ்ட் மூலமாக மட்டும் அல்லாது, வாய்ஸ் காலிங், வீடியோ காலிங் ஆகிய சேவைகளையும் வாட்ஸ் அப் வழங்கி வருகிறது. இதன் மேம்பட்ட ஒரு அம்சமாக, குரூப் வீடியோ மற்றும் ஆடியோ காலிங் சேவையை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பரிசோதனை அளவில் இருந்த இந்த வசதி முதல் முறையாக, பயனாளர்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக கொண்டு வரப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள ஆண்ட்ராய்டு, மற்றும் ஐஓஎஸ் இயங்கு தளத்தில் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்தும் பயனாளர்கள் இந்த சேவையை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில், அதிகபட்சமாக நான்கு பேருடன் மட்டுமே வாய்ஸ் மூலமாகவும் வீடியோ மூலமாகவும் பேச முடியும் என்பது கவனிக்கத்தக்கது. டெக்ஸ்ட் மெசேஞ் போல, வீடியோ மற்றும் ஆடியோ காலிங் வசதியும் என்கிரிப்ட் செய்யப்பட்ட ஒன்று வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!