ஒரே வாரத்தில் உடற் பருமன், கொலஸ்ரோலை கட்டுப்படுத்த இப்படியும் டயட் பண்ணலாம்…!


இப்போதெல்லாம் யாரைப் பார்த்தாலும் உடல் பருமன் கூடியவர்களாகவே இருக்கின்றார்கள். காரணம் தற்போது அனைவராலும் உண்ணப்படும் பாஸ்ட்புட் வகைகளும் எண்ணெய் அதிகளவில் உள்ள உணவுகளே ஆகும்.

இதனால், எல்லோரும் டயட் எனப்படும் உணவுக் கட்டுப்பாட்டு முறையில் அக்கறை செலுத்துகின்றார்கள். இதன் காரணமாக பல்வேறு உணவு வகைகளை தவிர்க்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள்.

ஆனால், இவ்வாறு உணவுகளைத் தவிர்க்காது டயட் இருக்கும் முறை பற்றி நீங்கள் அறிவீர்களா?

இந்த முறையை ஆங்கிலத்தில் த்ரைவ்டயட் என அழைப்பார்கள். அதாவது இறைச்சி வகைகளை தவிர்த்து சத்தான மரக்கறி வகைகளை உண்ணுவதே இந்த முறைமை ஆகும்.

அதுசரி, இந்த முறையின் கீழ் எந்தெந்த உணவுகளை உண்ண வேண்டும் எனக் கேட்கின்றீர்களா? பச்சைத் தாவரங்கள் மற்றும் தானியங்களை முழுமையாக சமைக்காது குறைந்த வெப்பநிலையில் அரைசமையலாக சமைத்து உண்ண வேண்டும்.
மேற் கூறியதைப் போல் பின்வருவனவற்றை அரை அவியலாக உண்ண வேண்டும்.

01. போஞ்சி
02. விதைவகைகள்
03. கீரைகள்
04. மரக்கறிகள்
05. பழவகைகள்
06. சணல்தாவரம்
07. பழங்கள், விதைகளைஅழுத்துவதன் மூலம் பெறப்பட்ட எண்ணெய்
08. ஆப்பிள்சைடர்வினிகர்
09. கடற்தாவரங்கள்
10. பழுப்புஅரிசி


இம் முறையின் கீழ் உணவு உட்கொள்ளும் போது புரோட்டீன், பைபர் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு என்பன உடலில் சேர்வது உறுதிப்படுத்தப்படும். மருந்தகங்களில் விற்கப்படும் விட்டமின்கள் மற்றும் கனியுப்புக்களை உட்கொள்வதைத் தவிர்த்து நாம் உட்கொள்ளும் உணவின் மூலமே தேவையான ஊட்டச்சத்துக்களை பெறுவதே இம் முறையின் நோக்கமாகும்.

தவிர்க்கப்படவேண்டியஉணவுவகைகள்
01. இறைச்சி வகைகள் (மாட்டிறைச்சி, பன்றிஇறைச்சி, ஆட்டிறைச்சி)
02. மீன் வகைகள்
03. கடலுணவுகள் மற்றும் மட்டி
04. முட்டை
05. பாலுணவு வகைகள்
06. பதப்படுத்தப்பட்ட உணவுவகைகள்

இந்த டயட் முறையை பின்பற்றுவதன் மூலம், திடமான மற்றும் ஆரோக்கியமான உடற் பருமனை பேண முடிவதோடு இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ரோலை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

எனினும் இந்த டயட் வகையை பின்பற்றுவதனால் இறைச்சி வகைகளில் இருந்து கிடைக்கக்கூடிய விட்டமின்கள் மற்றும் சத்துக்கள் கிடைக்காத காரணத்தால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புண்டு.

உயர் இரத்த அழுத்தம், அதிகபடியான கொழுப்பு, நாட்பட்ட நோய் மற்றும் இருதயநோய் உள்ளவர்கள் இந்த முறையைப் பின்பற்றுவது உத்தமம். © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!