பக்கவாதம் உங்கள தாக்க போகுது என்பதற்கான பொதுவான அறிகுறிகள்…!


பக்கவாதம் என்றதும் இறப்பை ஏற்படுத்தி விடும் என்ற அச்சம் தானாகவே மனதுக்குள் வந்துவிடுகிறது. மூளைக்குச் செல்லும் இரத்தம் தடைப்படுவதனால் மூளையில் ஏற்படும் பாதிப்பே பக்கவாதம் என்கின்றனர்.

இரண்டு வகையான பக்கவாதம் ஏற்படுகிறது, அவை ischemic stroke, hemorrhagic stroke. Ischemic stroke எனப்படுவது மூளைக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் நாடிகளில் தடை ஏற்படுவதனால் ஏற்படும்.

மூளையில் இரத்தக் கசிவு ஏற்படுவதனால் ஏற்படும் பக்கவாதம் hemorrhagic stroke.
பக்கவாதம் ஏற்படும் போது அல்லது அதற்குரிய அறிகுறிகள் தென்படும் போது, உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வதனால் ஆபத்தை அதிகரிக்காமல் தடுப்பதுடன், இறப்பிலிருந்தும் பாதுகாக்கலாம்.

பக்கவாதத்திற்குரிய அறிகுறிகள் ஒவ்வொரு தனிநபருக்கும் அதன் தன்மையைப் பொறுத்து வேறுபடுகிறது.

பக்கவாதத்திற்கான பொதுவான அறிகுறிகள்.

• நடப்பதில் கடினத் தன்மை ஏற்படுதல். நடக்கும் போது கால்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று ஒத்துழைக்காமல் சமநிலையற்ற தன்மை ஏற்படுதல்.

• பேசுவதில் கடினத் தன்மை ஏற்படுவதுடன், மற்றவர்களால் அதனை புரிந்து கொள்ள முடியாது.

• கை, கால்களில் உணர்வற்று மரத்துப் போதல், குறிப்பாக ஒரு பக்கத்தில் மட்டும் இந்தப் பிரச்சினை ஏற்படுதல்.

கண்டிப்பாக கவனிக்க வேண்டியவை:

•அவர்கள் சிரிக்கும் போது முகம் ஒரு பக்கத்திற்கு இழுக்கச் செய்யும்.

• இரண்டு கைகளையும் உயர்த்த சொல்லும் போது ஒரு கை தானாகவே கீழிறங்கும்.

• ஒரே வார்த்தையை திரும்ப திரும்ப சொல்லும் போது வார்த்தையில் தடுமாற்றம் ஏற்படும்.

உங்களிடத்தில் அல்லது உங்கல் அருகில் இருப்பவர்களிடத்தில் இந்த அறிகுறிகளில் எதாவது பார்க்க முடிந்தால் அவசர ஊர்தி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வது சிறந்தது.


பக்கவாதத்திற்கான மேலும் சில அறிகுறிகள்.

•தலைச் சுற்று.

• உடல் செயலிழந்து போகும்.

• ஒரு கண் அல்லது இரண்டு கண்களிலும் பார்வைப் பிரச்சினை ஏற்படுதல்.

• திடீரென ஏற்படும் தாங்கமுடியாத தலைவலி.

• பக்கவாதத்தை ஏற்படுத்தும் காரணிகள்.

• பக்கவாதம் உயிர் ஆபத்தை ஏற்படுத்துவதனால், இதை ஏற்படுத்தும் காரணிகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது முக்கியம்.

• உயர் இரத்த அழுத்தம்.

• புகைப்பிடித்தல்.

• நீரிழிவு நோய்.

• 55 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல்.

• பரம்பரை.

• ஒற்றைத் தலைவலி.

பக்கவாதத்தை ஏற்படுத்தும் காரணிகளைக் கண்டறிந்து சிகிச்சை கொடுப்பதுடன், தொடர்ச்சியான உடற்பயிற்சி செய்வதனாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையாலும் பக்கவாதம் வராமல் தடுக்க முடியும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!