உங்களுக்கு ஒரு ஷாக்… இந்த பொருட்களால் உங்க உயிருக்கே ஆபத்தாம்…!


பகிர்தல் மிகவும் நல்லது தான். இன்றைக்கு வீடுகளை விட்டு வெளியில் விடுதிகளில் தங்கியிருக்கும் பலரும் இந்த பகிர்தலில் தான் வாழ்க்கையே நகர்கிறது. பகிர்தல் உங்களின் நட்பை அன்னியோன்னியமாக்கும் என்று நம்பி கொடுத்து வந்த விஷயங்களை எல்லாம் உடனே நிப்பாட்டவேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது.

ஆம் மக்களே, நீங்கள் பகிரும் அல்லது உங்களி நண்பர்களிடத்தில் இருந்து வாங்கி நீங்கள் பயன்படுத்தும் பொருட்களால் நோய்த்தொற்று ஏற்ப்பட்டு உங்களை பெரும்பளவு பாதிக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. சர்வ சாதரணமாக பகிர்ந்த பொருட்கள் நோயை பரப்பிடும் காரணிகள் என்று தெரியாமலே இருந்திருக்கிறோம்.

ஸ்ப்ரே :


வியர்வை நாற்றம் வெளியில் தெரியாமல் இருக்க பாடி ஸ்ப்ரே,ரோல் ஆன் போன்றவை எல்லாம் கடன் வாங்கி பயன்படுத்தும் பழக்கம் இருந்தால் அவற்றை இன்றோடு மறந்துவிடுங்கள். உடலில் இருக்கும் நச்சுக்கள் வியர்வை வழியாக வெளியேறுகிறது.

ஒருவர் பயன்படுத்தியதை நீங்கள் பயன்படுத்தினால் அந்த பாக்டீரியா உங்களுக்கும் தொற்றிக் கொள்ளும்.

ரேசர் :


ஆத்திர அவசரத்திற்கு காலையில் தூக்கத்தில் எது யாருடையது என்று தெரியாமல் மாற்றி பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது மற்றபடி நான் எதுவும் வாங்கி பயன்படுத்தமாட்டேன் என்று கூலாக சொல்பவர்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ்.

தயவு செய்து உங்களுடைய ரேசரை பகிராதீர்கள். அதே போல நீங்களும் பிறருடைய ரேசரையும் பயன்படுத்தாதீர்கள். ஏன் தெரியுமா? ரேசரை ஒரு முறை பயன்படுத்திவிட்டால் அவை உங்களின் ரத்த நாளங்களில் படும். அதனை பிறர் பயன்படுத்தும் போது ரத்தத்தால் பரவிடும் எயிட்ஸ்,ஹெப்படைட்டீஸ் போன்ற நோய்கள் கூட பரவும் அபாயம் உண்டு.

இயர் போன் :


அடிக்கடி செய்கிற மிகப்பெரிய தவறு இது. அவசரத்திற்கு சட்டென எடுத்து கொடுக்கும் நல்ல மனசுக்காரர்களே இதோடு இயர் போன் கடனாக கொடுப்பதையும் வாங்குவதையும் நிறுத்திவிடுங்கள்.

காதில் நுண்ணிய பாக்டீரியா நிறைய இருக்கும். ஒருவர் பயன்படுத்தியதை நீங்களும் பயன்படுத்தும் போது அந்த பாக்டீரியா தொற்று உங்களுக்கும் வந்து விடும். பிறர் பயன்படுத்தியதை நீங்கள் பயன்படுத்தும் சூழல் வந்தால் நன்றாக சுத்தம் செய்த பின்னர் பயன்படுத்தலாம். ஆல்கஹால் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

சோப் :


பத்து பேர் இருக்கும் அறையில் ஒரே ஒரு சோப் வைத்துக் கொண்டு சமாளிக்கும் பேச்சுலர் பிரண்ட்ஸ் என்று பெருமை பொங்கும் யங்கஸ்டர்ஸுக்கு இது ஷாக்கிங்காகத்தான் இருக்கும்.

உங்களுக்கென்று தனி சோப்பை வைத்துக் கொள்ளுங்கள். நம் உடலில் உள்ள அழுக்குகளை போக்குவது மட்டும் சோப்பின் வேலையல்ல, பாக்டீரியாவை பரப்பு வேலையையும் சத்தமின்றி செய்து கொண்டிருக்கிறது.

காலுறை :


இது கடனாக வாங்காவிட்டாலும் தெரியாமல் மாற்றிப் போட்டுச் செல்லும் பழக்கம் வழக்கமாகவே இருக்கிறது. நாள் முழுவதும் போடப்பட்டிருக்கும் காலுறையில் அதிகப்படியான வியர்வை இருக்கும். காய்ந்துவிட்டால் பாக்டீரியா நீங்கிவிட்டது என்று அர்த்தமன்று.

அதனையே நீங்கள் பயன்படுத்தும் போது, அந்த பாக்டீரியா உங்களை தொற்றிக் கொள்ளும். அதோடு உங்களைடைய வியர்வை பாக்டீரியாவும் சேர்ந்து சருமப் பிரச்சனைகளை உண்டாக்கும்.

இவற்றைத்தவிர, டூத் பிரஷ்,உள்ளாடைகள்,டவல் போன்றவற்றை பகிர்வதை தவிர்த்திடுங்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!