உடலில் ஏற்படும் வீக்கத்தையும், வலியையும் உணவால் குணப்படுத்த முடியுமா..?


உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கிய பகுதி வீக்கம் ஏற்படுதல்.

காயங்கள் ஏற்பட்ட உடன் வீக்கமைடைவதுடன் உடலை வெளி நுண்ணங்கி தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கவும். திசுக்கள் பாத்திப்படைவதை குணப்படுத்தவும் உதவுகிறது.

வீக்கத்திற்கு என தொழிற்பாடுகள் எதுவும் கிடையாது.

ஆனால் வீக்கம் ஏற்பட்ட இடத்தில் வலி, அசைக்க முடியாத நிலை, சிவப்பு நிறமாக மாறுதல் போன்றவை நிகழும்.

இந்த வீக்கத்தை இரண்டு வகையாக பிரிக்க முடியும்.

குறுகியகால வீக்கம், நீண்ட கால வீக்கம். குறுகிய கால வீக்கங்கள் சருமத்தில் ஏற்படும் வெட்டி காயங்கள், மூட்டுக்களின் சுளுக்குகள், தொற்றுக்கள் ஏற்பட்ட நகங்களில், தொண்டை வலி போன்ற சந்தர்ப்பங்களில் ஏற்படும்.

இவை சிறிது நாட்களில் குணமடைந்து விடும்.

நீண்ட கால வீக்கங்கள் எனப்படுவது எலும்பு தேய்வதனால் ஏற்படும் வாதம், ருமாட்டிசம், ஆஸ்துமா போன்ற சந்தர்ப்பங்களில் ஏற்படும்.

இவற்றைக் குணப்படுத்துவது மிகவும் கடினமானது.

வீக்கத்தை கட்டுப்படுத்தும் உணவுகளால் தொடர்ச்சியான நோய்களால் ஏற்படும் வீக்கத்தை தடுக்கும்.

1. அவுரிநெல்லிகள்.

அவுரி நெல்லியில் உள்ள flavanoids, anthocyanin எனும் ஆண்டிஒக்ஸிடன் வீக்கத்தைக் குறைப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தி மரபணுவை மாற்றுகிறது.

இதில் உள்ள விட்டமின் சி, polyphenols வீக்கத்திற்கு எதிராக சக்தியைத் தூண்டுகிறது. இதனை தினமும் சாப்பிடுவது சிறந்தது.


2. பச்சை இலை, காய்வகைகள்.

இதில் கலங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஆண்டிஒக்ஸிடன் அதிகம் உள்ளது. அத்துடன் விட்டமின், கே, ஏ, சி இருப்பதனால் மூளையை ஒக்ஸிஜன் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது.

3. செலரி.
செலரியில் ஆண்டிஒக்ஸிடன் தன்மையும், வீக்கத்திற்கு எதிராக செயற்படும் தன்மையும் காணப்படுவதனால் உடலில் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தி, இரத்த அழுத்தத்தை மேம்படுத்தும்.

இது வீக்கத்தைக் குறைப்பதுடன், பக்டீரியா தொற்றுக்களிற்கு எதிராக செயற்படும். இதனை சால்ட்களிலும், உணவிலும் சேர்த்து சாப்பிடலாம்.

4. சீன முட்டைக்கோஸ்(Bok choy).

இது ஒருவகையான முட்டைகோஸ். இதில் ஆண்டிஒக்ஸிடன், விட்டமின்கள், கனியுப்புக்கள் காணப்படுகிறது. 70 வகையான ஆண்டிஒக்ஸிடன் காணப்படுவதனால் வீக்கத்திற்கு எதிராக செயற்படுகிறது.

5. பீற்றூட்.

பீற்றூட்டில் உள்ள ஆண்டிஒக்ஸிடன் வீக்கத்தினால் பாதிப்படைந்த கலங்களை குணப்படுத்த உதவுகிறது. இது உடலில் ஏற்படும் வீகத்தைக் குறைத்து, அதனால் பாதிப்படைந்த கலங்களை புதுப்பிக்கின்றது.


6. இஞ்சி.

இஞ்சியில் அதிகளவான ஆண்டிஒக்ஸிடன், வீக்கத்திற்கும், தொற்றுக்களிற்கும் எதிராக செயற்படும் தன்மை உள்ளதனால், வீக்கத்தை உருவாக்கும் நொதிப் பொருட்களையும், மரபணுக்களையும் தடுக்கிறது.

தினமும் ஒரு கப் இஞ்சி தேநீர் குடிப்பதனால் வீக்கத்தில் இருந்து தீர்வைப் பெற முடியும்.

7. ப்ரோக்கோலி.

ப்ரோக்கோலியில் அதிகளவான பொட்டாசியம், மக்னீசியம், ஆண்டிஒக்ஸிடன் இருப்பதனால் வீக்கத்திற்கு எதிராக செயற்படுகிறது.

8. கிறீன் டீ.

கிறீன் டீ உடல் எடையைக் குறைப்பது மட்டுமன்றி, உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைப்பதற்கும் இதில் உள்ள ஆண்டிஒக்ஸிடன் உதவுகிறது. அத்துடன் சருமத்தில் கட்டிகள் ஏற்படாமல் தடுக்கும்.


9. அன்னாசி.

அன்னாசியில் உள்ள bromelain எனும் சமிபாட்டு நொதியால் உடலில் ஏற்படும் வீக்கத்தை தடுக்க முடிகிறது. அத்துடன் தசை, மூட்டு வலிகளையும், ஆஸ்துமாவையும் குணப்படுத்த உதவுகிறது.

இதனை பழச்சாறாக எடுத்துக் கொள்ள முடியும்.

10.கறுப்புச் சாக்லேட்.

கறுப்பு சாக்லேட்களை சாப்பிடுவதனால் இரத்த அழுத்தம் குறைவடைவதுடன், வயிற்றில் நுண்ணங்கிகள் நொதிக்கச் செய்வதற்கும் உதவுகிறது.

மேலும் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அது மட்டுமன்றி வீக்கத்திற்கு எதிராக செயற்படும் தன்மை இதில் உள்ளது.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!