உடல் கொழுப்பு அதிகரிக்காமல் இருக்க வேண்டுமா..? அப்ப இந்த உணவுகளை தொட்டும் பார்க்காதீங்க..!


இரத்தத்தில் உள்ள கொழுப்புக் கலங்களில் இருக்கும் எண்ணெய் போன்ற பொருளையே கொழுப்பு என்கின்றனர்.

உடலில் உள்ள நல்ல கொழுப்புக்கள் திசுக்களை ஆரோக்கியமாக பாதுகாப்பதற்கும், உருவாக்குவதற்கும் உதவுகிறது.

ஆனால் கெட்ட கொழுப்புக்கள் இரத்தத்தில் அதிகரித்தால், இரத்த ஓட்டத்தில் தடைகள் ஏற்படுவதுடன் இருதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

தேவையற்ற கொழுப்புக்கள் உடலில் அதிகமாவதற்கு காரணம் தவறான உணவுத் தேர்வுகள், வாழ்க்கை முறையுமே.

ஒரு நாளிற்கு 300 கிராமிற்கு அதிகமான கொழுப்புகளை உட்கொள்ளவது சிறந்ததல்ல.

சமநிலையான உணவுகளை உட்கொள்வதனால் உடலில் கொழுப்புக்கள் அதிகரிக்காமல் தடுப்பதுடன் உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக நோய், நீரிழிவு, இருதய நோய், பக்க வாதம் மாரடைப்பு போன்றவை வருவதற்கான வாய்ப்புக்களைக் குறைக்கலாம்.

கொழுப்புச் சத்து அதிகம் உள்ள இந்த உணவுகளை தவிர்த்து, உடலில் கொழுப்பின் அளவு அதிகமாகமல் பாதுகாக்க முடியும்.

1. மட்டி மீன்.

மட்டி மீன், இறால், நண்டு இனத்தை போன்றது.

இவற்றில் அதிகளவான கொழுப்புக்கள் உள்ளது.

இதனை சமைக்கும் போது அதன் சுவைக்காக பட்டரையும் சேர்த்துப் பயன்படுத்தினால் இருதய நோய்களினால் பாதிப்படைகின்றனர்.

2. பட்டரும் நெய்யும்.

பட்டர், நெய்யில் கொழுப்பு, சோடியத்தின் அளவு அதிகமாக காணப்படுவதனால் இரத்தத்தில் கொழுப்பின் அளவைக் கூட்டுவதுடன் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி விடுகிறது.

ஆனால் வீட்டில் தயாரிக்கப்படும் நெய் உடலிற்கு சிறந்தது.


3. சிவப்பு இறைச்சி.

சிவப்பு இறைச்சியில் saturated fat அதிகம் காணப்படுவதனால் கொழுப்பின் அளவை அதிகரித்து விடுகிறது.ஆனால் சிக்கனின் இதயப்பகுதி, மீன் போன்றவற்றில் கொழுப்பின் அளவு குறைவாகவே இருக்கும்.

குளிரூட்டப்பட்ட, பொதி செய்யப்பட்ட இறைச்சிகளை சாப்பிடுவதனால் கொழுப்பின் அளவு அதிகமாகிறது.

4. துரித உணவுகள்.

துரித உணவுகளான பீக்ஷா, பாலடைக் கட்டி, பிஸ்கட், பர்கர், சிப்ஸ் போன்றவற்றில் அதிகள்வான கொழுப்புக்கள் உள்ளன.

இந்த கொழுப்புக்கள் இரத்தத்தில் கெட்ட கொழுப்புக்களாக மாறுகின்றன. இவை உடலிற்கு தீங்கையே விளைவிக்கின்றன.


5. பாலாடைக் கட்டி

பாலாடைக் கட்டியில் அதிகளவான கல்சியமும், தாவரப் புரோட்டினும் உள்ளது.

ஆனால் 100 கிராம் பாலாடைக்கட்டியில் 123 மில்லி கிராம் கொழுப்பு உள்ளது. எனவே இதனை குறைந்தளவு சாப்பிடுவது சிறந்தது.


6. ஜஸ்கிறீம்.

அணைத்து வயதினத்தாராலும் விரும்பி உண்ணும் உணவு வகை ஜஸ்கிறீம். இது hydrogenated மரக்கறி எண்ணெய்யிலும், கொழுப்பு நிறைந்த பாலிலும் தாயாரிக்கப்படுகிறது.

இதனை தொடர்ச்சியாக உட்கொள்வதனால் கொழுப்பின் அளவு அதிகரித்து விடும்.

7. மாட்டிறைச்சி.

100 கிராம் மாட்டிறைச்சியில் 564 மில்லிகிராம் கொழுப்பு உள்ளது. அதன் ஈரலில் 331 மில்லி கிராம் கொழுப்பு காணப்படுகிறது.

இவை இரத்தத்தில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்வதனால் குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.


8. மதுபானம்.

மதுபானம் உடலில் கொழுப்பின் அளவை அதிகப்படுத்துவதுடன், உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

9. சுத்திகரிக்கப்பட்ட தாணியங்கள்.
மைதா ரொட்டி, பாஸ்தா போன்றவற்றில் சுத்திகரிக்கப்பட்ட மாப்பொருட்கள் அதிகம் உள்ளதனால் இரத்ததில் கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்வதுடன், நாடிகளில் அடைப்பையும் ஏற்படுத்துகிறது.

10. கனோலா எண்ணெய்.

கனோலா hydrogenated எண்ணெய்யாக காணப்படுவதனால் இதில் உள்ள கொழுப்புக்கள் இரத்தத்தில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது.

எனவே கனோலா, சோயா, சோள எண்ணெய்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டியது அவசியம்.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!