கண்ணில் எரிச்சல், நீர் வடிதலை குணப்படுத்த இதோ எளிய பாட்டி வைத்தியம்..!


கண் எரிச்சல் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் அதிகமான் நீர்த் தன்மை அல்லது காய்ந்த கண்கள், கடி ஏற்படுதல், எரிவு, சிவப்பாக மாறுதல், பார்க்கும் பொருட்களின் தன்மை, கண்ணில் வேறு பொருட்கள் செல்லுதல், கண் வெளி, அதிகப்படியான் வெளிச்சம், கலங்கலான பார்வை போன்றவையே.

புகை, மண், மாசு, மரத் தூள்கள் கண்ணில் விழுதல், கண் நோய், அழகிற்கு பயன்படுத்தும் பொருட்கள், கண் தொற்றுக்கள் போன்றவற்றாலேயே இந்த அறிகுறிகள் ஏற்படுகிறது.

கண் எரிச்சலை ஏற்படுத்தும் சிறந்த இயற்கை வழிகள்.

இந்த வழிகளை பின்பற்றும் போது தொற்றுக்கள் இல்லாத சுத்தமான நிலையில் வைத்து செய்வது அவசியமானது.

• காய்ந்த கண் நோயினை தீர்க்கும் மலர் (eyebright) ஒரு தேக்கரண்டி எடுத்து 2 கப் சூடான நீரில் 30 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும்.

• சுத்தமான துணியை எடுத்து ஊற வைத்த நீரில் நனைத்து கண்களை மூடி அதன் மீது 10 நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும்.

• கண்கள் உலர்வடைவதை தடுப்பதற்கு தினமும் இரண்டு தடவைகள் ஆளிவிதை எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும்.

• செவ்வந்திப்பூக்கள் எண்ணெய்யை ஒரு கப் சூடான நீரில் கலந்து, அதனை பஞ்சினால் நனைத்து மூடிய கண்களின் மீது 10 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்.

கண் எரிச்சல் வராமல் தடுப்பதற்கான வழிகள்.

காற்று அதிகமாக உள்ள நாட்களில் வெளியே செல்லும் போது பாதுகாப்பு கண்ணாடியை அணிந்து செல்வது அவசியம்.

1. புகை அதிகம் உள்ள இடத்தில் இருந்து விலகி இருத்தல்.

2. கண்ணிற்கு பயன்படுத்தும் ஒப்பனைகளை விரைவாக அகற்றுவதனால் பக்டீரியா தொற்றுக்கள் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

3. வீட்டில் தெளிப்பான்கள்(spray) பயன்படுத்தும் போது முகத்தை தூரமாக வைத்திருத்தல் அவசியம். சுத்தமான காற்றுள்ள இடத்தில் இருப்பதே சிறந்தது.

4. கண்களை தேய்த்தலை தவிர்த்தல் மிகவும் அவசியமானது.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!