இத்தனை நோய்களையும் குணப்படுத்த இந்த 3 இயற்கைப் பொருட்களுமே போதும்..!


எலுமிச்சப்பழத்தில் சிறந்த சுவையினால் சாலட், பான வகைகள் மற்றும் பல உணவுகளில் சுவையூட்டியாக பயன்படுத்துவதுடன் இதில் இருக்கும் பல மருத்துவ குணங்களால் பல உடல் கோளாறுகளிற்கு மருந்தாகவும் பயன்படுகின்றது.

அத்துடன் மிளகு, உப்பு சுவையூட்டியாகவும் பல இயற்கை மருத்துவ முறைகளில் சேர்மானங்களாகவும் பயன்படுத்துகின்றனர்.

மூன்று இயற்கைப் பொருட்களை பயன்படுத்துவதனால் உடலிற்கு கிடைக்கும் நன்மைகள்.

1. தொற்றுக்கள்.

சூடான நீரில் உப்பை கலந்து கொப்பளித்து வந்தால் தொண்டையில் உள்ள பக்டீரியா தொற்றுக்களும் வலியும் நீங்கி விடும்.

2. ஆஸ்துமா பிரச்சினை.

ஆஸ்துமா பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் 2 கராம்பு, 10 மிளகு, 15 ஓம இலையை நீரில் போட்டு அவிக்கவும் 15 நிமிடங்கள் மிதமான வெப்பத்தில் சூடாக்கி பின்பு சாடியில் போட்டு மூடியினால் மூடி வைக்கவும்.

அதில் இரண்டு தேக்கரண்டி தேனை கலந்து ஆற வைக்க வேண்டும். இதனை 2 வாரங்கள் குளிரூட்டியில் வைத்து பயன்படுத்த முடியும்.

3. மூக்கடைப்பு.

சீரகம், மிளகு, ஏலக்காய், இலவங்கம் போன்றவற்றை சேர்த்து உரலில் அரைத்து அந்த பவுடரை முகர்வதனால் மூக்கடைப்பு நீங்கி விடும்.

4. மூக்கில் இரத்தக் கசிவு ஏற்படுதல்.

பஞ்சினை எலுமிச்சப்பழச் சாற்றில் நனைத்து மூக்குத் துவாரத்தில் வைப்பதுடன் தலையை நிமிர்த்தி வைத்து இரத்த கசிவை கட்டுப்படுத்துவதுடன் வாந்தி வராமல் தடுக்கும்.

5. பித்தப்பையில் கற்கள் உருவாகுதல்.

பித்தப்பை கற்கள் உருவாவதற்கு காரணம் பித்தப்பை திரவம் அதிகமாதல். இதனால் சமிபாட்டை பிரச்சினைகள் மற்றும் வலி ஏற்படுகின்றது.

இதனை தவிர்ப்பதற்கு ஒரு பகுதி எலுமிச்சப்பழச் சாறுடன், ஒரு பகுதி மிளகு மற்றும் 3 பகுதி ஒலிவ் எண்ணெய்யை சேர்த்து எடுத்துக் கொள்ளுதல் சிறந்தது.


6. குமட்டல்.

எலுமிச்சப்பழத்தின் வாசனை குமட்டல், வாந்தி ஏற்படுத்தாமல் தடுப்பதுடன், மிளகு வயிற்றில் கோளாறுகள் வராமல் தடுக்கின்றது.

எனவே ஒரு கோப்பை சூடான நீரில் ஒரு தேக்கரண்டி மிளகு ஒரு தேக்கரண்டி எலுமிச்சப்பழச் சாற்றை சேர்த்து மெதுவாக அருந்த வேண்டும்.

7. பல் வலி.

½ தேக்கரண்டி அரைத்த மிளகுடன் கராம்பு எண்ணெய்யை கலந்து பல் வலி உள்ள இடத்தில் தடவி வந்தால் உடனடியாக வலிகள் குறைவடையும்.

8. உடல் எடை.

ஒரு மேசைக்கரண்டி தேனுடன் சூடான நீர், ¼ பங்கு அரைத்த மிளகு, இரண்டு மேசைக்கரண்டி எலுமிச்சப்பழச் சாறு சேர்த்துக் குடிப்பதனால் அதில் உள்ள Polyphenol மெட்டபோலிசத்தை அதிகரிப்பதுடன், இன்சுலீன் அளவை சீராக்கி உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கின்றது.

9. குளிர் காய்ச்சல்.

பாதி எலுமிச்சப்பழச் சாற்றை ஒரு கப் சுடு நீரில் கலந்து அதில் எலுமிச்சப்பழத்தை தோலுடன் 10 நிமிடங்கள் நனைய வைக்கவும்.

பின்பு எலுமிச்சப்பழத்தை அகற்றி அதில் தேனை கலந்து குடித்தால் குளிர் காய்ச்சல் குணமடையும்.

10. தொண்டை வலி.

ஒரு மேசைக்கரண்டி உப்புடன், ஒரு தேக்கரண்டி எலுமிச்சப்பழச் சாறு மற்றும் ½ தேக்கரண்டி கறுப்பு மிளகை ஒரு கோப்பை நீரில் சேர்த்து நன்றாக் கொப்பளித்து வந்தால் தொண்டைவலி குணமடையும்.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!