கெட்ட கொழுப்பை கரைத்து உடலை ஒல்லியாக்கும் கிறீன் டீயை வெறும் வயிற்றில் குடிக்கலாமா..?


உடல் எடையை குறைப்பதற்கு கிறீன் டீ சிறந்த பானமாக இருப்பதனால் இதனை பலர் தினமும் அருந்துகின்றனர்.

பச்சை தேயிலை தாவரத்தில் உள்ள அரும்பு, இலை மற்றும் தண்டுப் பகுதிகளை பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்துவதுடன், ஆரோக்கியமான பானமாக இதனை பயன்படுத்துகின்றனர்.

கிறீன் டீ பயன்படுத்துவதனால் புற்றுநோயை தடுப்பதுடன், மூளையின் செயற்பாட்டை அதிகரிக்கவும் செய்கின்றது, மேலும் மன அழுத்தம், தலை வலி, வயிற்றுப் போக்கு, எலும்புகளின் பாதிப்பு போன்றவற்றில் இருந்து உடலை பாதுகாக்கின்றது.

இதனை பயன்படுத்துவதனால் இதய நோய், இரத்த அழுத்தம், நீரிழிவு, பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை, சிறுநீரக கல் போன்றவை வருவதற்குரிய ஆபத்தைக் குறைக்கின்றது.

ஆனால் கிறீன் டீ குடிப்பதனால் பக்கவிளைவுகள் பல ஏற்படுவது என்பதே உண்மை. இதில் உள்ள காஃபின் மற்றைய தேநீர்களில் போன்றதல்ல.

அதனை அதிகம் உட்கொள்ளௌம் போது தடுமாற்றம், பதட்டம், நடுக்கம் போன்றன ஏற்படுகின்றது.

கிறீன் டீயில் 2-3 சத வீதம் காஃபின் இருப்பினும் இவை சிந்தனை திறனை பாதிக்கச் செய்கின்றது.
கிறீன் டீயினால் ஏற்படும் பாதிப்புக்கள்.

1. வயிற்றுக் கோளாறு.

இதில் உள்ள காஃபின் வயிற்றில் உள்ள அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்வதனால் சமிபாட்டு பிரச்சினைகளை ஏற்படுத்தி வயிற்றில் வலி மற்றும் வாந்தி போன்ற பல கோளாறுகளை ஏற்படுத்துகின்றது.

2. தலை வலி.

கிறீன் டீயில் உள்ளா காஃபின் தலை வலி, தலைச் சுற்று போன்றவற்றை ஏற்படுத்துவதுடன் சில நேரங்களில் தொடர்ச்சியான தலை வலியால் பாதிக்கச் செய்து விடும்.

எனவே மைக்ரேனால் பாதிக்கபட்டவர்கள் இதனை பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

3. தூக்கமின்மை.

கிறீன் டீ நரம்புகளை தூண்டச் செய்வதனால் இரவில் தூங்குவதற்கு முன்னர் கிறீன் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

அத்துடன் அதில் உள்ள காஃபின் மூளையினால் தூக்கத்தை ஏற்படுத்த விடாமல் தடுப்பதுடன் Adrenalin உருவாக்கத்தை அதிகரிக்கச் செய்கின்றது.

4. இரும்புச் சத்து குறைபாடு.

தொடர்ச்சியாக கிறீன் டீயினை பயன்படுத்துவதனால் இரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர்.இதில் உள்ள tannins, polyphenols உடல் இரும்புச்சத்தை உறிஞ்சுவதை தடுத்து இரும்புச் சத்து குறைபாட்டை ஏற்படுத்துகின்றது.

5. சீரற்ற இதயத்துடிப்பு.

கிறீன் டீயில் உள்ள காஃபின் இதயத் துடிப்பை வேகப்படுத்துவதுடன் சீரற்ற நிலையை உருவாக்குகிறது. இதனால் நெஞ்சு படபடப்பு மற்றும் நெஞ்சு வலி ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.

அத்துடன் தீடிரென இதயத்துடிப்பு வேகம் மாறுவதனால் பல நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

6. தசைப்பிடிப்பு.

அதிகளவான கிறீன் டீ குடிப்பதனால் அதில் உள்ள காஃபின் உடலில் சேர்ந்து எலும்பு தசைகளை இறுக்கமடையச் செய்வதனால் தசைப் பிடிப்புக்கள் ஏற்படுவதுடன் கால்கள் அசைக்க முடியாமல் நோய் ஏற்படுகின்றது.


7. வயிற்றுப் போக்கு.

காஃபின் மலத்தினை வெளியேற்ற உதவுவதனால் அதிகளவான கிறீன் டீ அருந்தும் போது வயிற்றுப் போக்கு ஏற்படுகின்றது.

நீங்கள் முதல் தடவை கிறீன் டீ அருந்தும் போது பொதுவாக வயிற்றுப் போக்கு ஏற்படும். எனவே குறைந்தளவு கிறீன் டீ அருந்துவதுடன் வெறு வயிற்றில் அருந்துவதை தவிர்க்கவும்.

8. வாந்தி.

கிறீன் டீயில் Polyphenol இருப்பதனால் இவை மூளையில் ஒக்ஸிஜன் தாக்கத்தின் மூலம் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் குமட்டல், வாந்தி போன்றவற்றால் பாதிக்கப்பட நேரிடும்.

9. நெஞ்செரிச்சல்.

கிறீன் டீ அமிலத் தன்மை நிறைந்ததனால் உணவுக் குழாயில் எரிச்சலை உண்டாக்கி நெஞ்செரிச்சலை ஏற்படுத்துகின்றது.

போத்தலில் உள்ள கிறீன் டீ யை வாங்கினால் அதில் அஸ்கோர்பிக் அமிலம் அதிகளவில் இருப்பதனால் வயிற்றில் அமிலத் தன்மை அதிகரிப்பதுடன் நெஞ்செரிச்சலும் ஏற்படுகின்றது.

10. நீரிழிவு நோய்.

கிறீன் டீ இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதனால் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இதனை பயன்படுத்துவதை தவிர்ப்பது சிறந்தது.

இரண்டாம் வகை நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுபவர்கள் கிறீன் டீ குடிப்பதனால் இன்சுலீன் அளவில் மாற்றம் ஏற்படுகின்றது.

11. எலும்பு தேய்தல்

கிறீன் டீயில் உள்ள காஃபின் உடல் கல்சியத்தை உறிஞ்சாமல் தடுக்கின்றது, அதிகளவில் கிறீன் டீ எடுத்துக் கொள்வதனால் கல்சியம் வெளியேற்றப்படுகின்றது. இதனால் எலும்புகள் தேய்வடைகின்றன. – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!