ஒவ்வாமை, வீக்கத்தை முற்றாக விரட்டும் 6 சக்தி வாய்ந்த உணவுகள்..!

pain

உடலில் காயங்கள் ஏற்படும் போதும் திசுக்கள் பாதிப்படையும் போதும் பாதுகாப்பிற்காக வீக்கங்கள் ஏற்படுகின்றன.

வீக்கம் ஏற்பட்டு விட்டால் நமக்கு அச்சம் ஏற்படுகின்றது, ஆனால் இவை நன்மையை செய்வதை நாம் அறிவதில்லை.

உடலில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதை வீக்கம் மூலம் நமக்கு தெரியப்படுத்துகின்றது. ஆனால் இதனை தொடர்ச்சியாக கவனிக்காமல் விடுவதனால் பல நோய்கள் ஏற்படுகின்றன.

தொடர்ச்சியான வீக்கத்தினால் திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு ஊட்டச்சத்துக்கள் சென்றடையாமல் பாதிப்படைந்து விடுகின்றன.

சில பங்கம் விளைவிக்கு உணவு வகையினாலும் வீக்கங்கள் ஏற்படுகின்றன.

நீரிழிவு, இதயநோய், வாதம், புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகளவில் வீக்கங்கள் ஏற்படுகின்றன.

ஆனால் இவற்றை சில உணவுகளால் தவிர்க்க முடியும்.

1. அன்னாசி.

அன்னாசியில் உள்ள Bromelain உடலில் ஏற்படும் வீக்கம், வலிகளுக்கு எதிராக செயற்படும். இதனை சமைத்து சாப்பிடுவத விட பச்சையாக சாப்பிடுவதே சிறந்தது.

2. பச்சை இலை, காய் வகைகள்.

வீக்கத்தை நீக்கும் சக்தி வாய்ந்த alpha-linoleic அமிலம், ஒமேகா-3 அமிலம் பச்சை இலை, காய் வகைகளில் அதிகம் உள்ளன.

3. புதிய எண்ணெய்

அதிகமாக புதிய எண்ணெய்களை பயன்படுத்துவதனால் இதில் உள்ள ஒலிக் அமிலம், கொழுப்பமிலம் வீக்கத்திற்கு எதிராக செயற்படும். இதனை சமைப்பதை விட பச்சையாக உட் கொள்வதே சிறந்தது.

4. கடலை, விதை மற்றும் ஆளி விதை

கடலை, விதை, ஆளி விதைகளை பச்சையாக உட் கொள்வதனால் உடலில் வெப்பத்தை அதிகரித்து வீக்கத்தை உடைத்து விடுகின்றன

மேலும் இதில் உள்ள alpha-linoleic அமிலம், ஒமேகா-3 கொழுப்பு அமிலம் வீக்கத்தில் இருந்து பாதுகாப்பைத் தருகின்றது.

5. ஆப்பிள் மற்றும் வெங்காயம்

ஆப்பிள் மற்றும் வெங்காயத்தில் உள்ள quercetin இயற்கையான ஹிஸ்டமின் மட்டுப்படுத்தியாக செயற்படுகின்றது.

சூழலின் ஒவ்வாமையால் ஏற்படும் வீக்கத்தை இவை இலகுவாக குணப்படுத்துகிறது.

6. மஞ்சள்

மஞ்சள் சக்தி வாய்ந்த மாசாலா வகை. மஞ்சளில் காணப்படும் curcumin உடலில் ஏற்படும் வீக்கங்கள் மற்றும் வலிகளை இலகுவாக விரட்டக் கூடியது.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!