19.06.2018 இன்றைய ராசிபலன்


மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். புதுமை படைக்கும் நாள்.

ரிஷபம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். கலைப் பொருட்கள் வாங்கு வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.

மிதுனம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். தைரியம் கூடும் நாள்.

கடகம்: இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனஇறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் கோபப்படுவீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேன்டியிருக்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

கன்னி: சில வேலைகளை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.

துலாம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். மதிப்புக் கூடும் நாள்.

விருச்சிகம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறை வேறும். உறவினர், நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவார்கள். வீடு, வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சாதிக்கும் நாள்.

தனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

மகரம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.

கும்பம்: உற்சாகமாக எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். நன்மை கிட்டும் நாள்.

மீனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!