அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளை பீட அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்..!!


அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் குழுவொன்று அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

பசுபிக் கட்டளைப் பீடத்தின், மூலோபாயத் திட்டமிடல் மற்றும் கொள்கைப் பிரிவு பிரதிப் பணிப்பாளரான பிரிகேடியர் ஜெனரல் மார்க் கில்லெட் தலைமையிலான நான்கு அதிகாரிகளைக் கொண்ட குழுவே சிறிலங்கா வந்திருந்தது.

இந்தக் குழுவினர், கடந்த 14ஆம் நாள் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.

இந்தச் சந்திப்பில் அமெரிக்க தூதரக அதிகாரிகளும் பங்கேற்றனர்.source-puthinappalakai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!