பூஞ்சை(fungal)தொற்றால் ஏற்படும் சைனஸ், தலைவலியை இயற்கையாக விரட்டுவது எப்படி?


மூக்கின் உட்பகுதியில் உள்ள தோலில் பூஞ்சையால்(fungal) ஏற்படும் வீக்கத்தை சைனஸ் தொற்று என்கின்றனர்.

இது முற்றாக குணப்படுத்த முடியாததால் பலருக்கு தினமும் தொல்லைகளை ஏற்படுத்தக் கூடியது.

பூஞ்சை தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள்.

• இருமல்.

• காய்ச்சல்.

• சோம்பல்.

• முகத்தில் ஏற்படும் வலி, வீக்கம்.

• பல் வலி.

• சுவை மற்றும் மணக்கும் உணர்வுகள் குறைவடைதல்.

• தொண்டை அடைப்பு.

• மூக்கு ஒழுகுதல்.

• மூக்கடைப்பு.

• தலைப் பாரம்.

• மூக்குச்சளி வெளியேறுதல்.

சைனஸ் பிரச்சினை ஏற்பட்டதும் மருந்துகளை பயன்படுத்துகின்றோம். ஆனால் அவை முழுமையான தீர்வைத் தருவதில்லை.

அதனால் சைனஸ் தொற்று வராமல் தடுப்பதே மிகச் சிறந்தது.

உடலில் பூஞ்சை தொற்றை வராமல் தடுக்கும் முறைகள்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவடையும் போது பூஞ்சையினால் மூக்குப் பகுதிகளில் உள்ள மெல்லிய தோல்கள் பாதிப்படைந்து சைனஸ் தொற்றுக்கள் ஏற்படுகின்றது.
எனவே பூஞ்சை யை உடலில் வளராமல் தடுக்க வேண்டியது முக்கியமானது. அதற்கான சில இயற்கை வழிகள்.


1. சர்க்கரை, தாணியங்களை தவிர்த்தல்.

பூஞ்சைக்குத் தேவையான ஊட்டச்சத்து சர்க்கரை மற்றும் தாணியங்களில் இருந்து கிடைக்கின்றது.

இதனை உட் கொள்வதை தவிர்ப்பதனாலோ அல்லது குறைப்பதனாலோ பூஞ்சை தொற்று அதிகமாகமல் தடுக்க முடியும்.

2. மீன் எண்ணெய்யை உட்கொள்ளுதல்.

மீன் எண்ணெய்யில் உள்ள ஒமேகா-3, DHA, EPA நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது. இது சைனஸ் தொற்றுக்களை நீக்குவதுடன் புற்று நோயை தடுக்கவும், ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவுகின்றது.

3. தேங்காய் எண்ணெய்யை சாப்பிடுதல்.

தேங்காய் எண்ணெய்யில் உள்ள லாரிக் அமிலம் பக்டீடியா, பூஞ்சை, வைரஸ் தொற்றுக்களில் எதிராக செயற்படும்.

ஆனால் தேங்காய் எண்ணெய் வாங்கும் போது கலப்படமற்ற சுத்தமான எண்ணெய்யாக வாங்க வேண்டியது அவசியம்.

4. பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் 10 உணவு வகைகளை தவிர்த்தல்.

உடலிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சோளம், கோதுமை, பார்லி, மதுபானங்கள், சர்க்கரை, நிலக்கடலை, பஞ்சின் விதைகள், மக்காச் சோளம், கம்பு, கடின பாலாடைக்கட்டி போன்றவற்றைத் தவிர்த்தல்.

5.உடற்பயிற்சி.

உடற்பயிற்சியினால் உடலில் வாயுவின் ஓட்டம் அதிகரிக்கச் செய்கின்றது, அத்துடன் சைனஸின் மூலம் சளியை வெளியேற்ற உதவுகின்றது.

இவை உடலிற்கு எரிச்சலை ஏற்படுத்தும் பொருட்களை வெளியேற்றவும் உதவுகின்றது.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!