லாவண்டர் எலுமிச்சப்பழச் சாற்றினால் தலைவலியை நீக்குவது எப்படி?


லாவண்டர் மிகச் சிறந்த தாவர வகை. இது மனநிலையினை சிறந்த முறையில் பேணுவதுடன், வலிகளையும் நீக்க வல்லது.

இது தொடர்ச்சியான வலி நிறைந்த தலைவலிகளை நீக்க வல்லது. மன அழுத்தம், படபடப்பால் ஏற்படும்.

தலைவலியை குணப்படுத்துவதுடன் நமது உணர்வுகளை அமைதிபடுத்தி வைத்திருக்க உதவுகின்றது.

தலைவலி மன அழுத்தம், உடல் வறட்சி, படபடப்பால் ஏற்படுகின்றது. இதனை லாவண்டர் எண்ணெய்

இலகுவாக குணப்படுத்துகின்றது.

லாவண்டர் சிக்கலான வடிவமைப்புடைய வாசனையுள்ள மூலிகை. இதில் மன அழுத்ததை குறைத்தல்,

தூக்கத்திற்கு உதவுதல், பக்டீரியா, பூஞ்சை தொற்றுக்களை நீக்குதல், நுண்ணங்கிகளை நீக்குதுல், வீக்கத்தை

குறைத்தல்.

நச்சுத் தன்மையை நீக்குதல் போன்ற பல மருத்துவ குணங்கள் உள்ளன.

லாவண்டர் எலுமிச்சப்பழச் சாற்றினால் தலைவலியை நீக்குவது எப்படி?

எலுமிச்சப்பழச் சாற்றுடன் லாவண்டர் எண்ணெய்.

சேர்மானங்கள்

• ஒரு துளி லாவண்டர் எண்ணெய்

• ஆறு எலுமிச்சப் பழத்தின் சாறு.

• ஒரு கோப்பை சுத்தமான தேன்12 கப் நீர்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்ட அனைத்து சேர்மானங்களையும் சேர்த்து நன்றாக கலக்கவும். சிறிது நேரம் குளிரூட்டிய பின்பு தேவைப்படின் மேலும் நீரையும் தேனையும் சேர்த்துக் கொள்ளவும்.

அதனை மூடி ஒரு மணி நேரத்திற்கு வைக்கவும்.
லாவண்டர் எலுமிச்சப்பழச்சாறு வலி நிறைந்த நீடித்த தலைவலியை குணப்படுத்துவதுடன், உடலை புத்துணர்ச்சி பெற வைக்கின்றது.

நமது வீட்டில் அல்லது அலுவலக அறையில் 10 முதல் 12 துளி லாவண்டர் எண்ணெய்யை தெளிப்பதனால் மன அழுத்தத்தை குறைக்க முடியும்.

குளிக்கும் சுடு நீரில் முதல் லாவண்டர் எண்ணெய் துளிகளை பயன்படுத்தினால் சிறந்த தீர்வை பெற முடியும்.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!